திமுகவின் ஒவ்வொரு செங்கலையா உருவ ஆரம்பிச்சிட்டார் முதல்வர் விஜய்.. முதல் செங்கல் எம்பி கலாநிதி வீராசாமியின் மகன்.. நிலமோசடி வழக்குப்பதிவு… ஜாமினில் கூட வெளிவர முடியாத வகையில் பிரிவுகள்.. இனி ஒவ்வொன்னா நடக்கும்.. ஒவ்வொரு செங்கலா உருவப்படும்.. பார்க்கத்தான போறீங்க, இந்த விஜய்யோட ஆட்டத்தை…!

சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நில மோசடி மற்றும் சாதிய வன்கொடுமை வழக்கில், வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த், திமுக மாமன்ற உறுப்பினர் ராணி ரவிச்சந்திரன் உள்ளிட்ட நான்கு…

kalanidhi veerasamy son

சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நில மோசடி மற்றும் சாதிய வன்கொடுமை வழக்கில், வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த், திமுக மாமன்ற உறுப்பினர் ராணி ரவிச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயதான அன்பரசு என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகார பலம் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு எதிராக இந்த வழக்கு பதியப்பட்டிருப்பது தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட அன்பரசு அளித்த புகாரை தீவிரமாக விசாரித்த அண்ணா நகர் போலீஸார், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது பட்டியல் சாதியினர் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, பொதுவெளியில் சாதி பெயரை சொல்லி அவமதித்தல், அச்சுறுத்துதல் மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்கான பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மோசடி செய்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான பிரிவுகளின் கீழும் போலீஸார் வழக்கை ஆவணப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக மொத்தம் நான்கு நபர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. முதலாவதாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரும், இரண்டாவதாக அண்ணா நகர் 102-வது வார்டு திமுக கவுன்சிலரான ராணி ரவிச்சந்திரனும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் வட சென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமியின் உதவியாளரான ஆசைத்தம்பி மற்றும் எம்பியின் மகனும், தனியார் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான சித்தார்த் ஆகியோரும் இந்த வழக்கில் அடுத்தடுத்த குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

புகார்தாரரான அன்பரசுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து விவகாரத்தில் இந்த மோசடியும் அச்சுறுத்தலும் அரங்கேறியுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை அண்ணா சாலையில் உள்ள 14 கிரவுண்ட் நிலம் மற்றும் அங்குள்ள பிரம்மாண்ட கட்டிடம் தொடர்பாகவே இந்தத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சொத்தானது ஏற்கனவே ஒரு வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த சூழலில், அதனை மையமாக வைத்து பெரிய அளவில் பண பரிவர்த்தனை பேச்சுவார்த்தைகள் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுடன் நடந்து வந்ததாகக்கூறப்படுகிறது.

சொத்து பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, அன்பரசிடம் இருந்து Power of Attorney குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தந்திரமாக பெற்றுக்கொண்டதாகப் புகாரில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, இரு தரப்பிற்கும் இடையே பேசப்பட்டவாறு ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை அவர்கள் அன்பரசுக்கு வழங்காமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து அன்பரசு அவர்களிடம் முறையிட்டு, தனக்கு வரவேண்டிய பணத்தைக் கேட்டபோதுதான் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் மோதலும் வெடித்துள்ளது.

பணத்தை கொடுக்க மறுத்த திமுக பிரமுகர்களும் எம்பியின் மகனும், தங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அன்பரசை பொதுவெளியில் மிக கேவலமாக நடத்தியுள்ளனர். அவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது சாதி பெயரை இழுத்து மிகவும் இழிவாகப் பேசி வசைபாடியதோடு, பணத்தை கேட்டால் உயிருக்கு ஆபத்து விளைவித்துவிடுவோம் என்று கடுமையான முறையில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த துரோகத்தாலும் அச்சுறுத்தலாலும் மன உளைச்சலுக்கு ஆளான அன்பரசு, சட்டப்படி நடவடிக்கை கோரி காவல் துறையை நாடியதை அடுத்து தற்போதைய போலீஸ் நடவடிக்கை பாய்ந்துள்ளது.