பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நிலவும் பதற்றமான சூழ்நிலையில் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள சஹோவால் கிராமத்தில், நேற்று பயங்கரவாதத்திற்கு உபயோகமாகக்கூடிய ஆயுதங்களும் வெடிகுண்டுப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மீட்பு நடவடிக்கையை எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பஞ்சாப் போலீசார் இணைந்து மேற்கொண்டனர்.
நெல் அறுவடையின் போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த மூடப்பட்ட பாக்கெட்டில் 4.5 கிலோ RDX வெடிகுண்டுப் பொருள், ஐந்து கை வெடிகுண்டுகள், ஐந்து துப்பாக்கிகள், எட்டு மாகசின்கள், 220 துப்பாக்கி வெடிகள், இரண்டு பேட்டரிகள் மற்றும் ஒரு ரிமோட் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் ஒரு பெரிய மூடியுள்ள பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து பாதுகாப்பு படையினரின் தகவல்படி சர்வதேச எல்லைக்கு அருகே காவலாளராக இருந்த BSF வீரர் ஒருவர் சஹோவால் கிராமத்தின் வயல்களில் இரண்டு பாக்கெட்டுகளை தற்செயலாக கண்டுபிடித்தார்.
முதல் பாக்கெட்டில் சுமார் 7 கிலோ எடையுடன், அதில் மூன்று பெரட்டா துப்பாக்கிகள், ஆறு மாகசின்கள், 9மி.மி வெடிகளான 171 ரவுண்டுகள், ஐந்து கையெறி வெடிகுண்டுகள், இரண்டு 9-வோல்ட் பேட்டரி செயலிகள், பன்னிரண்டு AA பேட்டரிகள், ஆறு ஃபியூஸ் மெக்கானிசம், இரண்டு ரிமோட் கொண்ட்ரோல்கள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் பேட்டரி சார்ஜர் ஆகியவை இருந்தன.
இரண்டாவது பாக்கெட்டில் ஒரு துப்பாக்கி, இரண்டு மாகசின்கள், 49 வெடிகள் மற்றும் 2.5 கிலோ எடையுள்ள இரண்டு வெடிகுண்டு பொருட்கள் இருந்ததாக அதிகாரி கூறினார்.
இந்த பாக்கெட்டுகள் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலமாக, அஜன்லா காவல் நிலைய எல்லைப் பகுதியில் வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. பாக்கெட்டுகள் எப்போது வீசப்பட்டன என்பது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வெடிகுண்டுகள் கண்டுபிடித்ததில் இருந்து பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போரை மறைமுகமாக தொடங்கிவிட்டதாக கருதப்படுகிறது.