ஹோட்டல் டாய்லெட்டில் மறைத்து வைக்கப்பட்ட செல்போன்.. 2 மணி நேர வீடியோவால் பரபரப்பு..!

Published:

 

பெங்களூர் ஹோட்டல் ஒன்றின் டாய்லெட்டில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டதாகவும் அந்த  செல்போனில் இரண்டு மணி நேர வீடியோ கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் உள்ள பிசியான சாலையில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் பெண், ள் டாய்லெட்டில் மொபைல் போனை வீடியோ எடுக்கும் வகையில் மறைத்து வைத்துள்ளார். மேலும் அவர் போன் அழைப்பு வராமல் இருக்க பிளைட் மோடில் வைத்து இருந்ததாக  தெரிகிறது.

சுமார் 2 மணி நேரம் அந்த டாய்லெட்டுக்கு வந்தவர்களை அந்த செல்போன் வீடியோ எடுத்த நிலையில் ஒரு வாடிக்கையாளர் தற்செயலாக குப்பை தொட்டியில் ஒரு போன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார். இதனை அடுத்து அவர் எடுத்து அந்த ஹோட்டல் நிர்வாகத்திடம் அளித்த நிலையில் ஹோட்டல் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.

உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்த நிலையில் டாய்லெட்டில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த பெண் கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் அந்த ஓட்டலில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அந்த செல்போனை ஆய்வு செய்தபோது 2 மணி நேரம் வீடியோ அதில் இருந்ததாகவும் பலர் டாய்லட்டை பயன்படுத்தியதை வீடியோ எடுக்கப்பட்டிருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூரு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

hotel2

மேலும் உங்களுக்காக...