பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவரான மன்ஜுநாத் ராவ், தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிட்ட நிமிடங்களை பதிவு செய்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், மன்ஜுநாத் தன் மனைவி பல்லவி மற்றும் மகனுடன் கை கோர்த்து சோனமார்க் பள்ளத்தாக்குகளில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். மூவரும் மகிழ்ச்சியாக புன்னகைத்து கொண்டிருக்க, பசுமை காட்சிகளும் அமைதியான இயற்கையும் பின்னணியாக அமைந்திருக்கின்றன.
பின்னர் உணர்ச்சிபூர்வமாக மாறும் அந்தக் காட்சியில், கணவன்-மனைவி ஒரே மாதிரியான உடைகள் அணிந்துள்ளனர். அவர்கள் வெறும் விடுமுறை செல்லும் குடும்பமாக இல்லாமல், அன்பிலும், ஒற்றுமையிலும் இணைந்திருக்கும் குடும்பமாக காட்டுகிறது.
மகனை நடுவிலே வைத்துக் கொண்டு மூவரும் அமைதியாக சுற்றிப்பார்க்கும் அந்த நிமிடங்களில், எவருக்கும் எதிர்பாராதவிதமாக, அவர்களின் வாழ்க்கை எதிர்பாரா மரணத்தால் நெருங்கப் போகிறது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.
அன்பான கணவரும் மகனுக்கு பாதுகாப்பான தந்தையுமாக இருந்த மன்ஜுநாத், ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவராக தன் உயிரை இழந்தார்.
இந்த வீடியோவை பார்த்த சமூக ஊடக பயனாளர்கள், அந்த மகிழ்ச்சியான தருணங்களுக்கும் அதற்குப் பின்னர் நடந்த கொடூர சம்பவத்திற்கும் இடையே உள்ள விரோதத்தை வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர். பலரும் குற்றவாளிகளுக்கு நியாயமான தண்டனை வழங்க கோரி உள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் வேதனையை, மன்ஜுநாத் ராவின் மனைவி பல்லவி ராவ் கூறியதாவது:
“நாங்கள் பஹல்காம் மவுண்டன் வில்லா ஹோட்டலில் தங்கியிருந்தோம். ஏப்ரல் 19 அன்று நாங்கள் காஷ்மீருக்கு வந்தோம். எல்லாமே அழகாகவும் அமைதியாகவும் இருந்தது… அந்த ஒரே தருணம் வரும்வரை. ஏப்ரல் 22 அன்று, அவர்கள் பஹல்காமில் உள்ள “மினி சுவிட்சர்லாந்து” என அழைக்கப்படும் பசுமை நிலத்திற்கு சென்றோம். சில நிமிடங்களில் துப்பாக்கிச் சூடு தாக்கியது. முதலில் எங்களுக்கு இது ராணுவப் பயிற்சி போல் தோன்றியது. சுற்றியிருந்த அனைவருக்கும் அதுபோலவே எண்ணம். யாரும் பீதி அடையவில்லை. ஆனால் உண்மை விரைவில் வெளிவந்தது.
என் கணவர் எங்களுக்காக சிற்றுண்டு வாங்க சென்றிருந்தார். அப்போது தான் துப்பாக்கி சத்தம் கேட்டது. என் மகனும் நானும் ஓடி சென்று பார்த்தபோது அங்கேதான் என கணவர் இறந்து கிடந்தார். அவரை சுட்டுவிட்டார்கள். அவர் இறந்துவிட்டார், நீ ஏன் எனகணவரை கொன்றாய், என்னையும் கொலை செய் என நான் சொன்னேன். ஆனால் பயங்கரவாதி அவ்வாறு செய்யவில்லை. அதற்கு பதிலாக, “மோடிக்கு சொல்லு,” என கூறிய வார்த்தைகள் இன்னும் என மனதை கொந்தளிக்கச் செய்கின்றன என பல்லவி கூறினார்..
இப்போது, சோனமார்கில் அவர்கள் மூவரும் கை கோர்த்து நடந்த அந்த வீடியோ, அவர்களின் வாழ்நாள் நினைவுகளுக்கு பெரும் பின்னணியாக மாறியிருக்கிறது. அமைதியான விடுமுறை ஒன்று இரத்தக்கறை விழுந்த பயங்கர நினைவாக மாறி விட்டது.
மன்ஜுநாத் ராவ், ஷிவமோகாவின் விஜயநகரை சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரி. தனது குடும்பத்திற்கு காஷ்மீரின் இயற்கை அழகைக் காண செய்வதற்காகவே இந்த பயணத்தை திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த கனவு ஒரு சோகமான முடிவாக மாறியது.
https://www.instagram.com/reel/DI1Oji3hmY9/?utm_source=ig_web_copy_link