வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டால் தினமும் ரூ.10,000 வருமானம்.. அறியாமல் ஆபத்தில் சிக்கும் அப்பாவிகள்..!

By Bala Siva

Published:

வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டால் தினமும் ரூ.10,000 சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையால் ஏமாந்து அப்பாவிகள் பலர் மோசடி வழக்கில் சிக்கிக் கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களாக வங்கி கணக்குகள் வாடகைக்கு விடப்படுவதாகவும் அதன் மூலம் முறைகேடான பண வர்த்தனை நடத்தப்பட்டு வருவதாகவும் புதுவிதமான மோசடி குறித்து காவல்துறைக்கு தகவல் வெளியாகி உள்ளது.

டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வங்கி கணக்குகள் வாடகைக்கு வேண்டும் என்றும் அதன் மூலம் தினமும் 3000 முதல் 10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்றும் விளம்பரம் செய்யப்படுகிறது. இதை நம்பி எந்தவித பரிவர்த்தனையும் செய்யாமல் இருக்கும் சில வங்கி கணக்குகளை சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு வாடகைக்கு விடுவதாகவும் அதனால் பல சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மர்ம கும்பலை நம்பி பலர் வங்கி கணக்குகளை வாடகைக்கு விடுவதாகவும் ஆனால் அந்த கணக்குகள் மூலம் செய்யப்படும் முறைகேடான பண பரிவர்த்தனைக்கு அந்த வங்கி கணக்குக்கு உரியவர் தான் பொறுப்பு என சிக்கலில் சிக்கிக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

சீனாவில் உள்ள ஒரு கும்பல் தான் இது போன்று வங்கி கணக்குகளை வாடகைக்கு எடுத்து வருவதாகவும், தினமும் 3000 முதல் 10 ஆயிரம் வரை மட்டுமே வங்கி கணக்கு உரியவர்களிடம் வாடகை செலுத்தி விட்டு அந்த கணக்கின் மூலம் கோடி கணக்கில் பண பரிவர்த்தனை முறைகேடாக செல்வதாகவும் செய்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வங்கி கணக்கு வாடகைக்கு எடுத்தவுடன் போன் நம்பரையும் மாற்றிக் கொள்வதாகவும் அதன் பின்னர் வரும் மெசேஜ்கள் எல்லாமே முறைகேடு செய்பவர்களுக்கு மட்டுமே வரும் என்றும் பண வர்த்தனை குறித்த எந்த தகவலும் தெரியாமல் கடைசியில் சிக்குவது வங்கி கணக்கை வாடகைக்கு விட்ட அப்பாவி தான் என்றும் கூறப்படுகிறது..

எனவே வங்கி கணக்கை காசுக்கு ஆசைப்பட்டு வாடகைக்கு விட்டால் அதில் நடக்கும் பரிவர்த்தனை அனைத்திற்கும் வங்கி யாருடைய பெயரில் இருக்கின்றதோ, அவர்தான் பொறுப்பு ஏற்பார் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சீன கும்பல் வேலை இல்லாத இளைஞர்களை கண்டறிந்து குறி வைப்பதாகவும் வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டால் கணிசமான தொகை வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி வங்கி கணக்குகளை வாடகைக்கு பெறுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே வருவாய் தங்களது வங்கி கணக்கை வாடகைக்கு விட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.