பெங்களூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர், மாதம் 8.3 லட்சம் சம்பளம் வாங்கியும், தனது மொத்த செலவு 8.87 லட்சமாக இருப்பதால், ஒவ்வொரு மாதமும் 57 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்றும், பெங்களூரில் தன்னால் சேமிக்க முடியவில்லை என்றும் சமூக வலைதளத்தில் புலம்பியுள்ளார். இதுவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மிகக் குறைவாக வசதிகள் உள்ளவர்கள் கூட வாழ்வதற்கு கடினமான நகரங்களில் ஒன்றாக பெங்களூரு கருதப்படுகின்றது. இருப்பினும், மாதம் 8.3 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு 57 ஆயிரம் ரூபாய் பற்றாக்குறை ஏற்படுவது இளைஞர்கள் குழுமங்களில் வேடிக்கையாகவும், கிண்டலாகவும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
இவர் தனது செலவுகளைப் பட்டியலிட்டு, கீழ்க்கண்டவாறு பகிர்ந்துள்ளார்:
🔹 வீட்டு வாடகை: : ₹1.5 லட்சம்
🔹 ஆடம்பரக் கார் EMI: ₹80,000
🔹 வீட்டு வேலை & துணி துவைப்பதற்கான சம்பளம்: ₹15,000
🔹 Zomato/Swiggy உணவு செலவு: ₹70,000
🔹 ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் டின்னர் & சாப்பாடு: ₹1.2 லட்சம்
🔹 வார இறுதி பயணங்கள் (கோவா & துபாய்): ₹1 லட்சம்
🔹 டீஷர்ட் (Branded): ₹10,000
🔹 மிக உயர்தர ஆர்கானிக் மது: ₹50,000
🔹 ஜிம் செலவு: ₹12,000
🔹 கிரிப்டோ & பங்குச் சந்தை முதலீடு: ₹1 லட்சம்
மொத்த செலவு – ₹8.87 லட்சம்
தனது மாத சம்பளம் – ₹8.3 லட்சம்
ஒவ்வொரு மாதமும் ₹57,000 இழப்பாகின்றது!
இதற்கு பலரும் காமெடி கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
“ஒரு மாதத்திற்கு ₹70,000 Swiggy/Zomato-க்கு செலவு செய்கிறீர்கள்? உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்!” – ஒருவர் பதிவு செய்துள்ளார்.
“வேண்டுமென்றால் நாம் சம்பளத்தை மாற்றி கொள்ளலாமா?” என மற்றொருவர் கிண்டல் செய்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!