பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பெங்களூரு தண்ணீர் தனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றும் அதனால் தனது முடி அதிகமாக கொட்டுகிறது என்றும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஏராளமான இலவச அட்வைஸ்கள் கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் அமிஷா அகர்வால் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் பெங்களூரில் மிகவும் தண்ணீர் கடினமாக இருக்கிறது என்றும் அதனால் தனது முடி கொட்டிக் கொண்டிருக்கிறது என்றும் இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்
அதற்கு பல்வேறு விதமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. பெங்களூரை சேர்ந்த ஒருவர் தனது மனைவி பாத்ரூமில் வாட்டர் பில்டர் மாட்டி இருபபதாகவும் அது தண்ணீரை சுத்தப்படுத்தி கொடுப்பதால் அவருடைய முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பலரும் பலவிதமான கமெண்ட்ஸ் கலை பதிவு செய்து வருகிறார்கள் என்றும் மினரல் வாட்டர் வாங்கி அதில் குளித்தால் முடி கொட்டாது என்று ஏகப்பட்ட நெட்டிசன்கள் அட்வைஸ் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கும் நிலையில் முடி கொட்டுதல் தான் ஒரு பெரிய பிரச்சனையா என்ற கமெண்ட்ஸ்களையும் சிலர் பதிவாகி பதிவு செய்து வருகின்றனர்.