எங்க பாத்தாலும் பொம்மைங்க.. கால் வைக்கவே இடமில்லாத பாழடைஞ்ச வீடு.. உள்ளே நுழைந்ததும் நடந்த விசித்திரம்..

Published:

இந்த உலகத்தில் பல இடங்கள் மக்கள் நுழைவதற்கு முடியாத வகையில், ஆள் நடமாட்டமே இல்லாத அளவுக்கு அமைந்திருக்கும். அதன் பின்னணி தொடர்பாக கட்டுக் கதைகளா அல்லது நிஜ கதைகளா வைரலாகிறது என்பதே கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். ஆனால், அது பற்றி வெளிவரும் தகவல்களில் உண்மையில்லை என்றாலும் கதைகள் என்றென்றைக்கும் சுவாரஸ்யம் நிறைந்து தான் இருக்கும்.

அந்த வகையில் பிரிட்டன் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல், பலரையும் ஒரு நிமிடம் அச்சப்பட வைத்துள்ளது. Mitch Johnson மற்றும் Jake Parr ஆகிய இருவர் பெண் ஒருவர் தனது கணவரின் மறைவுக்கு பிறகு பொம்மைகள் கொண்டு அடுக்கிய வீடு ஒன்று பற்றி தெரிந்து கொண்டுள்ளனர்.

மேலும், அந்த பெண் மறைவுக்கு பிறகு அந்த வீடும் பாழடைந்து போக, அங்கே அமானுஷ்யமான விஷயங்கள் நடைபெறுவது பற்றியும் மிட்ச் ஜான்சன் மற்றும் ஜேக் பார் ஆகியோருக்கு தெரிய வந்துள்ளது. இதனால், நீண்ட தூர பயணம் மேற்கொண்டு அந்த வீட்டிற்கு செல்ல வேண்டுமென்றும் அவர்கள் இருவரும் முடிவு செய்துள்ளனர்.

அப்படி அந்த வீடை நெருங்கிய அவர்கள், பாழடைந்த வீட்டின் பின்பக்க கதவு இல்லாமல் இருந்ததால் அதிலிருந்த இடைவெளி மூலம் அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது வலை பிடித்து போயிருந்த அறைக்குள் டெடி பியர் உள்ளிட்ட அனைத்து பொம்மைகளும் நிரம்பி இருந்து ஒருவித பயத்தையும் கொடுத்துள்ளது. மேலும் அந்த அறையில் இருந்து விரைவில் கிளம்ப வேண்டும் என்றும் மிட்ச் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

தான் இது போல நிறைய அமானுஷ்யம் நிறைந்த இடத்திற்கு சென்றிருந்ததாகவும் ஆனால் அவை அனைத்தையும் விட மோசமான இடம் இதுதான் என்றும் கூறியுள்ளார். மேலும் இங்கே நுழைந்ததும் ஒருவித பயம் உருவானதுடன் உடனடியாக கிளம்ப தோன்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே போல, அங்கிருந்த கரடி பொம்மைகளில் ஏதோ அமானுஷ்யம் இருப்பதாகவும் அவர்கள் உணர்ந்ததை தெரிவிக்கும் ஜான்சன், யாரோ தொடர்ந்து தங்களை கவனிப்பது போன்று ஒரு அச்சத்தை கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே போல, மிக மிக மோசமான வைபும் அங்கே தோன்றியதாக குறிப்பிட்டுள்ளனர்.
The house was owned by a woman who appeared to collect the toys after her husband died

Image Credits : KennedyNews/NoLimits

கடந்த 1980 களில் கணவன் மனைவி ஆகியோர் அந்த வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், அந்த ஆண் உயிரிழந்த பின்னர் அறை முழுக்க பொம்மைகளை வாங்கி அந்த பெண் நிரப்பி வைத்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. அங்கிருந்த ஒரே ஒரு அறையில் மட்டும் தான் நடக்க முடியும் என்றும், மற்ற இடங்களில் நடக்கவே இடமில்லாமல் பொம்மைகள் நிறைந்திருந்ததாகவும் அவர்கள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் பாழடைந்த நிலையில் இருக்கும் வீட்டில் பொம்மைகள் மட்டுமே இருந்தும் ஒருவித பயத்தை கொடுத்த சம்பவம், படிப்பவர்களையும் ஒரு நிமிடம் பதற வைத்துள்ளது.

மேலும் உங்களுக்காக...