பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்புகளில் குடுமிப்பிடி சண்டை.. சண்டைக்கு டிஜிட்டலை பயன்படுத்தும் விநோதம்..

  பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், தங்கள் குடியிருப்பு நலச் சங்கங்களுடன் வாட்ஸ்அப் குழுக்களில் நடந்த சில வினோதமான சண்டைகளை Reddit தளத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியைச்…

apartment

 

பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், தங்கள் குடியிருப்பு நலச் சங்கங்களுடன் வாட்ஸ்அப் குழுக்களில் நடந்த சில வினோதமான சண்டைகளை Reddit தளத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்த ஒரு Reddit பயனர், செல்லப்பிராணி தொடர்பான ஒரு புகார் எப்படி எதிர்பாராத அளவுக்கு பெரிய சண்டையாக மாறியது என்பதை விவரித்துள்ளார். ஒரு நாய் கழிவு பாதையில் இருந்ததால் அந்த நாயின் உரிமையாளரை கண்டறிய தடயவியல் சோதனை செய்யும் அளவுக்கு சென்றுவிட்டதாக அந்த பயனர் குறிப்பிட்டுள்ளார்.

சமையல் வாசனைகள் குறித்த பல புகார்கள் பதிவிடப்பட்டுள்ளன. ஒரு சம்பவத்தில், ஒரு குடியிருப்புவாசி சிக்கன் கறி வாசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்தப் புகாரில், “அந்த வாசனை சைவ உணவு உண்பவர்களுக்கு ‘அசௌகரியமாக’ இருக்கிறது” என்று கூறப்பட்டதாகவும், இது வாட்ஸ்அப் குழுவில் கடும் வாக்குவாதங்களுக்கு வழிவகுத்ததாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மற்றொரு சம்பவத்தில், ஒரு பெற்றோர் தங்கள் குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்ததாக குற்றம் சாட்டினர். சில குடியிருப்பாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் வீடியோ ஆதாரம் கோரியதாக தெரிவிக்கப்பட்டது. “இந்த பைத்தியக்காரத்தனம் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை பார்க்கவே நான் ஒரு சமூக ஆர்வலராக மாற வேண்டும் என்று தோன்றியது” என்று ஒரு பயனர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வாகன நிறுத்துமிடத்தின் சண்டைகளும் பொதுவாக விவாதிக்கப்பட்டுள்ளன. ஒரு குடியிருப்பாளர் தனது காரில் மீண்டும் மீண்டும் சேதம் ஏற்பட்டதால், சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஆவணங்களை தயார் செய்ததாகவும் ஒரு பயனர் தெரிவித்தார்.

இந்த Reddit பதிவு, பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்படும் குடுமிப்பிடி சண்டைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்றும், டிஜிட்டல் தளங்கள் பெரும்பாலும் மோதலுக்கான களமாக மாறியுள்ளன என்றும் கூறப்பட்டு வருகிறது.