பஜ்ஜிக்காக இவ்வளவு பெரிய சண்டையா? இவர்கள் எல்லாம் முதலீட்டாளர்களா? வைரல் வீடியோ..!

  சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாடு முடிந்தவுடன் பஜ்ஜி விநியோகம் செய்யப்பட்டபோது, அதை வாங்குவதற்கு ஒருவரை ஒருவர் சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி…

bajji

 

சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாடு முடிந்தவுடன் பஜ்ஜி விநியோகம் செய்யப்பட்டபோது, அதை வாங்குவதற்கு ஒருவரை ஒருவர் சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் உள்ளூர் தொழிலதிபர்கள் உட்பட, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மத்திய பிரதேச மாநிலத்தில் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், மாநிலத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாநாடு முடிந்ததும் அதில் கலந்து கொள்ள வந்த முதலீட்டாளர்களுக்கு பஜ்ஜி மற்றும் காபி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சில நொடிகளில், சிலர் போட்டி போட்டுக் கொண்டு பஜ்ஜி இருக்கும் இடத்திற்கு சென்றனர். முதலில் பிளேட் இருக்கும் இடத்திற்கு சென்று, அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பிளேட்டை எடுக்க முயன்றபோது அங்கிருந்த டேபிள், சேர்கள் எல்லாம் கீழே விழுந்து நொறுங்கின. பின்னர், பஜ்ஜி இருக்கும் இடத்திற்கு சென்று, பஜ்ஜியை மொத்தமாக சிலர் அள்ளிக்கொண்டுச் சென்றனர்.

உலக அளவில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், சிலர் செய்த இந்த அநாகரீக செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், “இவர்களெல்லாம் முதலீட்டாளர்களா?” என்ற கேள்வியுடன் கமெண்டுகளும் பதிவாகி வருகின்றன.