ஏஐ தொழில்நுட்பத்தால் பறிபோகும் வேலைகள்.. இந்த மாதம் மட்டும் 8000 பேர் வேலையிழப்பு..!

Published:

ஏஐ தொழில்நுட்பம் காரணமாக வேலை இழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டுமே இதுவரை 8000 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் நிலையில் இந்த தொழில்நுட்ப மூலம் வேலை மிகவும் எளிதாக முடிவடைவதால் வேலை நீக்கம் அதிகரித்து வருகிறது என்பதும் 100 மனிதர்கள் செய்யும் வேலையை ஏஐ  தொழில்நுட்பம் மிக எளிதாக செய்து விடுகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஏஐ தொழில்நுட்பம் காரணமாக ஏற்கனவே ஏராளமானோர் வேலை இழந்துள்ள நிலையில் தற்போது புதிதாக 8000 பேர் வேலை இழந்துள்ளதாகவும் இதில் பெரும்பாலும் ஐடி துறையில் உள்ளவர்கள் தான் வேலை இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

AI technology 1

வேலை இழந்த 8000 பேர்கள் 32 நிறுவனங்களில் இருந்து வேலை இழந்துள்ளதாகவும் அவைகளில் 20 நிறுவனங்கள் பெங்களூரை தளமாக கொண்டது என்றும் கூறப்படுகிறது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தற்போது ஏஐ தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளதால் அதிக அளவு ஊழியர்கள் தேவையில்லை என்பதாலும் அதே போல் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க வேண்டும், செலவை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் காரணமாக வேலை இழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...