ஜூன் 29ல் வெளியாகும் Asus Zenfone 10.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

By Bala Siva

Published:

மொபைல் போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Asus தனது புதிய மாடலான Asus Zenfone 10 என்ற ஸ்மார்ட்போனை ஜூன் 29ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த போன் டூயல்-கேமரா அமைப்பு மற்றும் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டது என்பது இந்நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது.

Asus Zenfone 10 ஸ்மார்ட்போன் Snapdragon 8 Gen 2 பிராஸசர் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 120Hz அம்சத்துடன் 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரதான கேமரா, 12எம்பி அல்ட்ராவைடு கேமரா மற்றும் 12எம்பி டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Asus Zenfone 10 ஸ்மார்ட்போன் வரும் 29ஆம் தேதி காலை 9 மணிக்கு நியூயார்க்கிலும், இரவு 9 மணிக்கு தைபேவிலும், மாலை 3 மணி பெர்லினிலும் வெளியாகவுள்ளது. மேலும் Zenfone 10 ஆனது Asus இணையதளத்தில் மற்றும் குறிப்பிட்ட சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக வாங்குவதற்கு கிடைக்கும்.

Asus Asus Zenfone 10 ஸ்மார்ட்போன் ASUS ZenUI 10 ஸ்கின் என்ற ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்டது. ஆக்டா-கோர் 4nm குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC மூலம் இயக்கப்படும். இது Adreno GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512GB வரை UFS 4.0 உள்ளடங்கிய ஸ்டோரேஜ் கொண்டது.

200 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.