AI டெக்னாலஜிக்கு பகுத்தறியும் திறன் இல்லை, எனவே கவலை வேண்டாம்: மத்திய அமைச்சர்

Published:

டெக்னாலஜிக்கு பகுத்தறியும் தன்மை கிடையாது என்றும் அதனால் வேலை இழப்பு ஏற்படும் என்ற கவலை வேண்டாம் என்றும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

AI என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னால்ஜி பெரும்பாலும் பணி சார்ந்ததாக இருந்தாலும், பகுத்தறிவு தேவைப்படும் சூழ்நிலையைச் சமாளிக்கும் திறன் கொண்டதாக இல்லை என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். எனவே AI டெக்னாலஜியால் வேலை இழப்பு என்ற அச்சம் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

முக்கிய வேலைகள் அனைத்தும் பகுத்தறிவைகொண்டிருக்கின்றன என்றும், அது மனிதர்களால் மட்டுமே முடியும் என்றும், AI அதிநவீனமாக இருந்தாலும் பகுத்தறியும் தன்மை இல்லை என்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் அவர் பேசினார்.

AI என்பது மனித திறன்களை அதிகரிக்க பயன்படும் ஒரு கருவியாகவே இருக்க முடியும் என்றும், மனிதனுக்கு மாற்றாக எப்போதும் அதனால் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார். இந்த டெக்னாலஜியை பணிகளை எளிமை ஆக்குவதற்கு வேண்டுமானால் பயன்படுத்தப்படலாம் ஆனால் மனிதனின் வேலையை அதனால் செய்யவே முடியாது என்றும் அவர் தெரிவித்தார்..

செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா உலகளாவிய அளவில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறிய அமைச்சர், AI திறமையை மேம்படுத்துதல், AI உதவியால் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல் மற்றும் சமூக நலனுக்கான பயன்பாட்டை ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

வேலைகளில் AI இன் தாக்கம் குறித்து கவலை அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரின் இந்த கருத்துக்கள் நிம்மதியை தந்துள்ளன.

மேலும் உங்களுக்காக...