ஆப்பிள் ஐபோனின் ஒவ்வொரு மாடலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வெளியானவுடன் பயனர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த ஆண்டு Apple iPhone 15 Pro Max வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.1.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் உள்ள சிறப்பு அம்சங்களை பார்க்கும்போது தான் இந்த விலை தகுந்தது தான் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Apple iPhone 15 Pro Max ஸ்மார்ட் போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும் என்பதை பார்ப்போம்.
Apple iPhone 15 Pro Max ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே, டிரிபிள் லென்ஸ் பின்புற கேமரா அமைப்பு மற்றும் 4400 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது A17 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 1284 x 2778 பிக்சல்கள் ரெசலூசன், 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி, 256ஜிபி, 512ஜிபி, 1டிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 48MP பிரதான சென்சார், 12MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் கொண்ட டிரிபிள்-லென்ஸ் பின்புற கேமரா அமைப்பு இருக்கும் என்றும், 12MP செல்பி கேமிரா இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் 4400 mAh பேட்டரி மற்றும் iOS 16 அம்சமும் இதில் உண்டு.
Apple iPhone 15 Pro Max ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை முந்தைய தலைமுறை iPhone 14 Pro Max ஐ விட அதிகமாக உள்ளது. புதிய A17 பயோனிக் சிப் மற்றும் டிரிபிள்-லென்ஸ் பின்புற கேமரா அமைப்பு ஆகியவற்றால் இதன் விலை அதிகம் இருக்கும் என்றும் தெரிகிறது.
மேலும் இந்த தகவல்கள் எல்லாம் இணையத்தில் உலா வரும் தகவல்கள் தான் என்பதும், அதிகாரபூர்வமானது இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். Apple iPhone 15 Pro Max வெளியிடப்படும் போது அதன் உண்மையான சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து தெரிய வரும்.