எப்பவாவதுன்னா ஓகே.. எப்பவுமேன்னா எப்படி? தொடர்ச்சியாக ரிப்பேர் ஆகி வரும் ஏர் இந்திய விமானம்.. என்ன தான் நடக்குது?

  துபாயிலிருந்து டெல்லி செல்லவிருந்த ஏர் இந்தியாவின் AI-996 விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. போயிங் 787 ரக இந்த விமானத்தில், பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்த பிறகு இந்த திடீர்…

Air India

 

துபாயிலிருந்து டெல்லி செல்லவிருந்த ஏர் இந்தியாவின் AI-996 விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. போயிங் 787 ரக இந்த விமானத்தில், பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்த பிறகு இந்த திடீர் ரத்து அறிவிப்பு வெளியானது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

கடந்த சில நாட்களாகவே ஏர் இந்தியா விமானங்கள் தொடர்ச்சியாக தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

நேற்று அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு பிற்பகல் 1:10 மணிக்கு கிளம்பவிருந்த AI-159 விமானமும் தொழில்நுட்பக் கோளாறால் ரத்தானது. இதுவும் போயிங் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானம் டெல்லியிலிருந்து அகமதாபாத் வந்தடைந்து, லண்டன் செல்ல தயாராக இருந்தது. ஆனால் திடீரென ரத்து செய்யப்பட்டது.

அகமதாபாத்-லண்டன் வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட இரண்டாவது விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன் திஅன்ம் திங்கட்கிழமை அன்று, டெல்லி-ராஞ்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக தலைநகருக்கே திரும்பியது. அதேபோல், மற்றொரு ஏர் இந்தியா விமானம், ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டு, தொழில்நுட்ப பிரச்சனையால் பாதியிலேயே ஹாங்காங்கிற்கு திரும்பியது. இந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி, தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் இந்த பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை சிக்கல்கள் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.