வந்தேன்டா பால்காரன்… தனிக்கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? விஜய்யுடன் கூட்டணியா? ரஜினிகாந்த் ஆதரவா?

  தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, மிகச் சிறப்பாக செயல்பட்டார் என்பதும், குறைந்த வாக்கு சதவீதம் வைத்திருந்த பாரதிய ஜனதா கட்சியை இரட்டை இலக்க வாக்கு சதவீதத்திற்கு கொண்டு சென்றவர் என்பதும் தெரிந்ததே.…

annamalai rajini

 

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, மிகச் சிறப்பாக செயல்பட்டார் என்பதும், குறைந்த வாக்கு சதவீதம் வைத்திருந்த பாரதிய ஜனதா கட்சியை இரட்டை இலக்க வாக்கு சதவீதத்திற்கு கொண்டு சென்றவர் என்பதும் தெரிந்ததே. அவருடைய கடின உழைப்பால் தான், பாரதிய ஜனதா கட்சி என்ற ஒன்று தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் தெரிய வந்தது.

ஆனால், அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தவும், இப்போதைக்கு திமுக ஆட்சியை நீக்கவும் அண்ணாமலை பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும், அதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் மதுரை வந்த அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலையை மேடையில் ஏற சொன்னதும், மக்கள் மத்தியில் இருந்து எழுந்த கரகோஷத்தைப் பார்த்து ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டதாகவும், “ஒருவேளை தமிழக பாஜக தலைவரை மாற்றி நாம் தவறு செய்துவிட்டோமோ” என்று அவர் எண்ணியதாகவும் கூட கூறப்பட்டது.

இந்த நிலையில், அண்ணாமலை தற்போது பாஜக மேலிடத்தில் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் தனி கட்சி தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. அண்ணாமலை தனி கட்சி தொடங்கினால், அவர் விஜய்யுடன் கூட்டணி வைப்பார் என்றும், இந்த கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. அண்ணாமலை மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உள்ளது என்பதும், இருவருமே ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் என்றும் கூறப்பட்டது. அண்ணாமலை தனி கட்சி தொடங்கினால், ஆர்.எஸ்.எஸ் அவருக்குத்தான் ஆதரவளிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால், “இப்போது கூட பாரதிய ஜனதாவின் தொண்டனாக இருக்கிறேன்” என்று கூறும் அண்ணாமலை, தனி கட்சி தொடங்குவாரா என்பது கேள்விக்குறி. ஒருவேளை பாஜகவிடமிருந்து பிரிந்து அவர் தனி கட்சி தொடங்கினால், விஜய்யுடன் கூட்டணி வைத்து, ரஜினியின் ஆதரவை பெற்று, ஒரு மிகப் பெரிய வாக்கு சதவீதத்தை அந்த கூட்டணிக்கு வாங்கி கொடுப்பார் என்றும், கண்டிப்பாக ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட்டணிக்கு கொண்டு வருவார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இவையெல்லாம் அரசியல் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஊகமாக இருந்தாலும், அண்ணாமலை, வந்தேன்டா பால்காரன் பாணியில் தனி கட்சி ஆரம்பிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.