எடப்பாடிக்கு பதில் செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளரா? அமித்ஷா போடும் கணக்கு? தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றங்கள்..!

  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில், அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என்றும், அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால்,…

sengottaiyan

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில், அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என்றும், அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு பிறகு மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், பாஜக – அதிமுக கூட்டணி என்று கூறியது, அதிமுக தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின், செய்தியாளர்களை சந்தித்தபோது, “அதிமுகவிலிருந்து ஒருவர் தான் முதலமைச்சர்,” என்று கூறி, எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை அவர் குறிப்பிடாமல் இருந்தது மேலும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்தச் சூழலில், தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவை வெளியேற்ற எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு வருவதாகவும், பாஜக வெளியேறினால் தான் மற்ற கட்சிகள் கூட்டணிக்குள் வரும் என்ற கணக்கை அவர் போட தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மாறாக, அமித்ஷா வேறு ஒரு கணக்கு போட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகிக் கொள்ள தயார் என்றும், “எங்களுக்கு திமுக தோல்வியடைய வேண்டும் என்பதுதான் முதல் குறிக்கோள்” என்றும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில், தமிழகத்தில் எட்டு தொகுதிகளில் பாஜக தனித்து நிற்கும் என்றும், அந்த தொகுதிகளில் அதிமுக கூட்டணி மறைமுகமாக தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் ரகசிய திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை, அந்த எட்டு தொகுதிகளில் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால், அதன்பின் ஆட்சியில் பங்கு கேட்கும் திட்டமும் இருப்பதாகவும் தெரிகிறது.

இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை என்றால், செங்கோட்டையனை முதலமைச்சர் ஆக்கி தங்கள் திட்டத்தை செயல்படுத்திக்கொள்ளவும் பாஜக தயங்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.

மொத்தத்தில், பாஜக தனது கட்சியை மட்டும் நிர்வாகம் செய்யாமல், அதிமுகவையும் சேர்த்து நிர்வாகம் செய்து வருகிறது என்றும், அதிமுகவின் குடுமி டெல்லியின் கையில் தான் இருக்கிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து கட்சியை எடப்பாடி பழனிச்சாமி எப்படி மீட்டெடுத்தாரோ, அதேபோல் பாஜகவிடமிருந்தும் அவர் கட்சியை மீட்க வேண்டும் என்று அதிமுகவின் நலன் விரும்பிகள் கூறி வருகின்றனர்.