துருக்கி அதிபர் மனைவியுடன் அமிர்கான் சந்திப்பு.. அடுத்த படம் ரிலீஸ் ஆகுமா?

‘சிதாரே ஜமீன் பார்’ பட டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே புறக்கணிப்பு என டிரெண்டாக ஆரம்பித்துவிட்டது. அமீர் கான் நடிப்பில் உருவாகும் இந்த படம், 2022-ல் வந்த ‘லால் சிங் சாதா’விற்கு பிறகு…

amirkhan1

‘சிதாரே ஜமீன் பார்’ பட டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே புறக்கணிப்பு என டிரெண்டாக ஆரம்பித்துவிட்டது. அமீர் கான் நடிப்பில் உருவாகும் இந்த படம், 2022-ல் வந்த ‘லால் சிங் சாதா’விற்கு பிறகு அவர் நடிக்கும் படம்.

2007-ல் வெளியான ‘Taare Zameen Par’ படத்தின் தொடர்ச்சி என சொல்லப்படும் ‘Sitaare Zameen Par’ திரைப்படத்தில், அமீர் கான் ஒரு ஆசிரியை கேரக்டரில் மன அழுத்தம் கொண்ட சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக நடித்துள்ளார்.

இந்த படத்தின் சொல்லப்பட்ட கருத்துகள், அன்பும், ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையும் குறித்து இருந்தாலும் திடீரென #BoycottSitaareZameenPar என்ற ஹேஷ்டேக் X-இல் டிரெண்டாகி வருகிறது. சிலர் 2020-ல் அமீர் கான், துருக்கி அதிபரின் மனைவி எமினே எர்டோகன்-ஐ சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்து விமர்சித்தனர். அப்போது ‘லால் சிங் சட்டா’ படப்பிடிப்புக்காக அமீர் கான் துருக்கி சென்றிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இப்போது சிக்கலை உருவாக்கியுள்ளது.

இந்தியா–பாகிஸ்தான் இடையிலான தற்போதைய பதற்ற சூழலில், துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததை இந்திய மக்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். அமீர் கான், பஹல்காம் தாக்குதல் குறித்து மௌனத்தை உடைத்து, “நீதி வேண்டும்… மறுபடியும் இது நடக்கக் கூடாது என்பதற்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

amirkhan

இந்த நிலையில் ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்தாலும் இந்த படத்தின் டிரைலர் யூடியூபில் 12 மணி நேரத்தில் 1.3 கோடி பார்வைகள் பெற்று, நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

“இந்தப் படத்தின் சிறப்பு உண்மையாகவே பாதிக்கப்பட்ட குழந்தைகள் நடிக்கின்றனர். யாரும் நடிப்பதாக இல்லை. இது நெகிழ்ச்சி தருகிறது” என ஒருவர் குறிப்பிட்டார்.

“முதல் பாகம்: ஒரு மாணவனை ஒரு ஆசிரியர் மாற்றுகிறார். இரண்டாம் பாகம்: ஒரு ஆசிரியரை மாணவர்கள் மாற்றுகிறார்கள்.”

“என் மகளுக்கு Autism Spectrum Disorder இருக்கிறது. இப்படம் எங்களுக்குப் ஊக்கமாக உள்ளது. நன்றி அமீர் சார்!”

“என் மகனும் Autism-ல் இருக்கிறார். இந்த டிரைலர் எனக்குப் பல உணர்வுகளை கொடுத்தது…” என இந்த டிரைலருக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.