நடுவானில் திடீரென குலுங்கிய ஏர் இந்தியா விமானம்.. பயணிகள் காயம்..!

Published:

டெல்லியில் இருந்து நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று திடீரென நடுவானில் குலுங்கியதில் பயணிகள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஏர் இந்தியாவின் ஏஐ302 என்ற ரக விமானம் டெல்லியில் இருந்து சிட்னி புறப்பட்டு சென்று கொண்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென விமான குலுங்கியது. இதனால் 7 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதில் மூன்று பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து சிட்னி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு எந்த பயணிக்கும் பெரிய காயம் இல்லை என விமான போக்குவரத்து இயக்குனர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கூறியபோது, ‘விமானம் பல ஆயிரம் அடிக்கு மேலே சென்று கொண்டிருந்தபோது திடீரென குலுங்கியது. பயணிகள் அனைவரும் அச்சமடைந்தோம். ஆனால் விமான ஊழியர்கள் எங்களுக்கு ஆறுதலாக இருந்தனர்’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) விசாரணை நடத்தி வருகிறது. விமானம் திடீரென குலுங்குவது என்பது மிகவும் ஆபத்தானது என்றும் இதுகுறித்து விசாரணை நடது வருவதாகவும் கூறப்படுகிறது.

நடுவானில் விமானம் திடீரென குலுங்கினால் பயணிகள் தங்கள் பாதுகாப்பிற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த சில குறிப்புகள் இதோ:

* உங்கள் சீட் பெல்ட்டை எப்பொழுதும் இறுக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் இருக்கையில் இருங்கள், நடமாடுவதைத் தவிர்க்கவும்.
* ஆர்ம்ரெஸ்ட் அல்லது உங்களுக்கு முன்னால் உள்ள இருக்கை போன்ற உறுதியான ஒன்றைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
*கடுமையான விமானம் குலுங்குவது என்பது ஒரு பயமுறுத்தும் அனுபவமாக இருக்கலாம், ஆனால் அமைதியாக இருப்பது மற்றும் விமானக் குழுவினரின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம்.

மேலும் உங்களுக்காக...