விஜய்க்கு பதில் சீமான்.. எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் பிளான்.. 3 முனை போட்டியாக மாறுமா?

அ.தி.மு.க. கூட்டணியில் சேர மாட்டேன் என நடிகர் விஜய் உறுதிபட கூறிவிட்டதை அடுத்து, நான்கு முனை போட்டி உறுதியான நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்டமாக, “விஜய் வராவிட்டால் பரவாயில்லை, நாம் தமிழர்…

vijay seeman e1751808218250

அ.தி.மு.க. கூட்டணியில் சேர மாட்டேன் என நடிகர் விஜய் உறுதிபட கூறிவிட்டதை அடுத்து, நான்கு முனை போட்டி உறுதியான நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்டமாக, “விஜய் வராவிட்டால் பரவாயில்லை, நாம் தமிழர் கட்சியை கூட்டணியில் இணைக்க முயற்சி செய்யலாம்” என்று திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘தனித்துப் போட்டி’ என அறிவித்துவிட்டு, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துவிட்டார் என்றும், தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் முதல் வேட்பாளர் பட்டியல் நாம் தமிழர் கட்சியிடம் இருந்துதான் வரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது விஜய் ஏற்படுத்திய மாற்றம் காரணமாக, நாம் தமிழர் கட்சியுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் சில நிபந்தனைகளுடன் நாம் தமிழர் கட்சி அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை நடந்தால், தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மூன்று முனை போட்டிதான் நடைபெறும் என்றும், அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் விஜய் கூட்டணியாக தேர்தல் நடைபெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் உள்ள தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், “தனித்துப் போட்டியிடுவதால் கட்சிக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் எந்தவித லாபமும் இல்லை என்றும், டெபாசிட் கூட வாங்க முடியாத நிலையில் எப்போதுதான் நம் கட்சியின் உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு செல்வது,” என்றும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அதையெல்லாம் கருத்தில் கொண்டு, சீமான் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் சில நிபந்தனைகளுடன் சேருவார் என்றும், முதல் முதலாக சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் சட்டமன்றத்திற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

“விஜய் கூட்டணிக்கு வருவார்” என்று மலைபோல் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி நம்பிக்கொண்டிருந்த நிலையில், திடீரென அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு வர முடியாது என்று விஜய் சொல்லிவிட்டதால், அதை ஈடுகட்டும் வகையில் நாம் தமிழர் கட்சி உட்பட சில கட்சிகளை கூட்டணிக்குள் இழுக்க எடப்பாடி பழனிசாமி ‘மாஸ்டர் பிளான்’ போடுவதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன.