இந்திய எம்பிக்கள் உலக நாடுகளுக்கு சென்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உள்ள நிலையில், பாகிஸ்தானும் சர்வதேச மேடையில் “அமைதிக்கான வாதம்” முன்வைக்க பிலாவல் பூட்டோ சர்தாரியை வெளிநாடு அனுப்புகிறது. இது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல் உள்ளது என்றும், இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பாகிஸ்தான் காப்பி அடிக்கிறது என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்தியா பாகிஸ்தானை ஒரு தீவிரவாத ஆதரவு நாடாக உலகம் முழுவதும் வெளிச்சத்திற்கு கொண்டு வர நாடாளுமன்ற உறுப்பினர்களை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பும் உலகளாவிய தூதரகம் முயற்சியை துவக்கிய மறுநாளே பாகிஸ்தானும் இந்தியாவின் பாதையை காப்பியடிக்க தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் அரசு, முன்னாள் அமைச்சராக இருந்த பிலாவல் பூட்டோ சர்தாரியை வெளிநாட்டுக்கு அனுப்பி, சர்வதேச அரங்கில் “அமைதிக்கான தனது நிலைப்பாட்டை” வலியுறுத்துவதாக அறிவித்துள்ளது.
மே 7 முதல் 10 வரை நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நான்கு நாள் இராணுவ மோதல் பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்த பின்னர், பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், பிலாவல் பூட்டோவை பாகிஸ்தானின் சார்பில் வெளிநாட்டு தலைநகரங்களில் பேச ஒருங்கிணைக்க சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியுறவில் பாகிஸ்தானின் “அமைதி வாதத்தை” முன்வைப்பார் என அவரது சமூக வலைத்தளமான எக்ஸ் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியதாவது:
“இன்று காலையில் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் என்னைத் தொடர்புகொண்டு, பாகிஸ்தானின் அமைதிக்கான நிலைப்பாட்டை சர்வதேச மேடையில் வலியுறுத்த ஒரு குழுவை எனது தலைமையில் செல்லும்படி கேட்டுக்கொண்டார். இந்த பொறுப்பை ஏற்க நான் பெருமைபடுகிறேன். இச்சவாலான காலத்தில் பாகிஸ்தானுக்கு சேவை செய்ய நான் உறுதியாக உள்ளேன்.” என்று கூறியுள்ளார்.
இதேவேளை, இந்தியா ஏற்கனவே வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய முக்கிய பகுதிகளுக்கு ஏழு தலைசிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்பியுள்ளது.
இந்த குழுக்கள் பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடாக இருப்பதை உணர்த்தவும், பஹல்காம் தாக்குதலை முன்னிறுத்தியும், இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்திய தரப்பில் உள்ள உறுப்பினர்களில், காங்கிரசைச் சேர்ந்த சஷி தரூர், பாஜகவின் ரவி சங்கர் பிரசாத், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் மற்றும் AIMIM தலைவரான அசாதுத்தீன் ஒவெய்சி ஆகியோர் முக்கியமானவர்கள்.
மொத்தத்தில் இந்தியா தனது நடவடிக்கையை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்து முன்வைத்து வரும்போது, பாகிஸ்தான் பிலாவல் பூட்டோவைக் கொண்டு பதிலளிக்க முயற்சிப்பது, இந்தியாவின் பாதையை ஈயடிச்சான் காப்பி அடிப்பதையே காட்டுகிறது. பாகிஸ்தானுக்கு என சொந்தமாக எதுவுமே யோசிக்க தெரியவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.