இந்த ட்ரெண்ட் AI Barbie Box Challenge என்று அழைக்கப்படுகிறது. இதில், பார்பி ஸ்டைல் டாய் பாக்ஸில் இருப்பது போல் உங்கள் தோற்றத்தில் ஒரு ஆக்ஷன் ஃபிகர் உருவாக்க முடியும். அதுமட்டுமின்றி உங்கள் பெயருடன், உங்கள் தனித்துவத்தை பிரதிபலிக்கும் ஆடைகள் மற்றும் அலங்கார அமைப்புடன் ஒரு அசல் கடையில் வாங்கும் விளையாட்டு பொம்மை போல இருக்கும்.
ChatGPT மற்றும் பிற AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தாலே, அதைக் கொண்டு உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப பார்பி டால் ஆக்ஷன் ஃபிகரை உருவாக்க முடியும். உங்கள் புகைப்படத்தையும், குறிப்புகளையும் பகுப்பாய்வு செய்து, AI அந்த டால் ஸ்டைல் இமேஜ்களை உருவாக்கும்.
உங்கள் தனித்துவமான இமேஜ்கள் மட்டுமின்றி சினிமா அல்லது காமிக் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட சிறிய டால் இமேஜ்களையும் உருவாக்கலாம். அதாவது Marvel உள்ளிட்ட திரைப்படங்களின் கேரக்டர்களையும் முயற்சிக்கலாம். இதனால் AI-யின் உதவியுடன், எல்லோரும் தங்களை தாங்களே ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றிக் கொள்ள முடியும்
இந்த டால் வகை இமேஜ்களை உருவாக்குவது எப்படி என பார்ப்போம். முதலில் ChatGPT செயலியை ஓபன் செய்யவும். லாகின் செய்தவுடன் “Add” பட்டனை கிளிக் செய்து, உங்கள் முழு உடலையும் தெளிவாக காண்பிக்கும் ஒரு புகைப்படத்தை பதிவேற்றவும். அதன்பின் இந்த புகைப்படத்தில் உள்ள நபரின் தோற்றத்தில் ஒரு யதார்த்தமான ஆக்ஷன் பார்பி டால் உருவாக்கவும் என பிராம்ப்ட் கொடுக்கவும். சில வினாடிகளில் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத ஒரு அட்டகாசமான Barbie Doll இமேஜ் உங்களுக்கு கிடைக்கும்.