அவர் கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது காயமடைந்ததாகவும், முதலில் எக்ஸ்ரே மூலம் சரியான தகவல் தெரியாத நிலையில், பின்னர் எம்ஆர்ஐ மூலம் எலும்பு முறிவு இருப்பது உறுதியாகிவிட்டதாகவும் கூறினார்.
பிளெமிங் மேலும் கூறுகையில், “அவர் காயத்துடன் ஆட முயற்சித்தது பாராட்டத்தக்கது. ஆனால் இப்போது அவர் தொடரை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக நாங்கள் வருத்தமடைகிறோம். மீதமுள்ள IPL 2025 சீசனுக்காக கேப்டனாக ‘அன்கேப்டு’ வீரர் எம்எஸ் தோனி பொறுப்பேற்கிறார்,” என்றார்.
இந்த செய்தி வெளியானதும், சமூக வலைதளங்களில் MS தோனியின் மீண்டும் கேப்டனாகும் அறிவிப்புக்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
2025 IPL தொடரில் CSK அணி தொடர்ச்சியாக 4வது தோல்விகளை சந்தித்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் 2 புள்ளிகளுடன் -0.889 எனும் நெட் ரன் ரேட்டில் உள்ளது. இந்த தொடரில் சென்னை அணிக்கு ஒரே வெற்றி மட்டுமே கிடைத்துள்ளது.
தற்போது வரை 2025 IPL தொடரில் டோனி 103 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், ஆனால் ஸ்டிரைக் ரேட் 153.73 ஆக வைத்துள்ளார். மொத்தமாக IPL-ல் அவர் 269 போட்டிகளில் 5346 ரன்கள் எடுத்துள்ளார், சராசரி 39.31 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 137.82.
தோனி கேப்டன் ஆனது ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை திரும்ப அளிக்கக் கூடிய பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. “தல கேப்டனாக திரும்பி வந்து வெற்றியை தேடி தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.