இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், அமெரிக்காவுக்கு வெளியே சில்லறை விற்பனை கடைகளை திறக்கும் முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடைகளில் கூகுள் தயாரிப்புகளான பிக்சல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஹார்டுவேர் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இடம் பார்த்து வருவதாகவும், முதல் கட்டமாக மும்பை மற்றும் டெல்லியில் கடைகளை திறக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
15,000 அடியில் உருவாகும் இந்த சில்லறை கடைகளில், ஸ்மார்ட் வாட்ச்கள், இயர் பர்ட்ஸ் உள்ளிட்ட கூகுளின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஒரு மிகப்பெரிய டெக்னாலஜி பொருட்களுக்கான சந்தையாக இருப்பதால், இந்திய சந்தையில் தனது தயாரிப்புகளை விரைவில் அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனம் சில்லறை கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.