அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து, அவரது ஒவ்வொரு அறிவிப்பும் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொடர் சரிவால் ஏராளமான நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், பல்வேறு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையை மட்டுமின்றி, மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து வெளியேறி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகின்றன.
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
வாரத்தின் முதல் வணிக நாளான இன்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் முடிந்தது.
சென்செக்ஸ் – 856.66 புள்ளிகள் சரிவு (1.14%) → 74,454.41
நிஃப்டி – 243.40 புள்ளிகள் சரிவு (1.07%) → 22,552.50
ஐடி துறை பங்குகள் – அதிகபட்சமாக 3% சரிவு
ஆட்டோ, நுகர்வோர் பொருட்கள் துறை – ஒரே உயர்ந்த துறைகள்
பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்திக்கின்ற நிலையில், முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.