தவெக கூட்டணிக்கு அதிமுக வரும்.. ஆனால் அது தேர்தலுக்கு பிறகு.. 2031ல் தவெக vs திமுக தான்..! விஜய்யின் கணக்கே வேற..

  தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணிக்கு 2026 ஆம் தேர்தலில் அதிமுக வர வாய்ப்பில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் தேர்தலுக்கு பிறகு தொங்கு சட்டசபை ஏற்பட்டால் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி…

aiadmk vs tvk

 

தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணிக்கு 2026 ஆம் தேர்தலில் அதிமுக வர வாய்ப்பில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் தேர்தலுக்கு பிறகு தொங்கு சட்டசபை ஏற்பட்டால் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், அப்போது இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளர் லோகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையில்தான் கூட்டணி என விஜய் உறுதியாக சொல்லிவிட்டதால், இந்த கூட்டணிக்கு அதிமுக போன்ற பெரிய கட்சி வருவதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால், அதே நேரத்தில் தேர்தலுக்கு பின்னர் வருவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், 2031 ஆம் ஆண்டு தேர்தல் வருவதற்குள் விஜய் அதிமுகவை விட வளர்ந்து விடுவார் என்றும், அப்போது திமுக மற்றும் தவெக இடையேதான் போட்டி இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் கூட்டணியில் அதிமுக வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவரது இந்த கணிப்பு இதுவரை யாரும் சொல்லாத புதிய பாணியில் இருப்பதால், அரசியல் ஆய்வாளர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. மொத்தத்தில், தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில்தான் 2026 தேர்தலில் கூட்டணி உருவாகும் என்றும், அதில் அதிமுகவோ பாஜகவோ இணைய வாய்ப்பே இல்லை என்றும், விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் மட்டுமே இந்த கூட்டணியில் இடம் பெறும் என்றும், இல்லையென்றால் விஜய் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

விஜய்க்கு 2026 தேர்தல் ஒரு புதிய முயற்சி தான் என்றும், ஆனால் அவர் 2031 இல் கண்டிப்பாக ஆட்சியைப் பிடித்து முதல்வராகிவிடுவார் என்றும், அடுத்த 5 ஆண்டுகள் அவரது அரசியல் வாழ்க்கை வேற லெவலில் பயணிக்கும் என்றும் லோகேஷ் அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.