நடிகர் சூரி ஹோட்டல் மீது பொதுமக்கள் பரபரப்பு புகார்.. மதுரை அரசு மருத்துவமனையில் நடக்கும் சம்பவம்..

By John A

Published:

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரைப்பட நடிகர் சூரியின் சொந்த ஹோட்டலான அம்மன் உணவகம் செயல்பட்டு வருகிறது. இதனை சூரியன் சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர். தற்போது மதுரை அரசு மருத்துவமனை மட்டுமல்லாது தெப்பக்குளம், ஒத்தக்கடை, கரிமேடு, செல்லூர், கடச்சனேந்தல், ஊமெச்சிகுளம் ஆகிய பகுதிகளிலும் அம்மன் உணவகம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த ஹோட்டல் மீது பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கின்றனர்.

பொதுவாக அரசு மருத்துவமனையில் தங்கியிருக்கும் நோயாளிகளுக்கும், உடன் இருப்போருக்கும் உணவு வழங்கப்படுவது வழக்கம். மேலும் அவ்வப்போது தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் உணவு வழங்கப்படுகிறது. நோயாளிகளுக்கேற்ப உணவுகள் காரம் குறைவாக, சத்தாக தயாரிக்கப்படுவதால் நோயாளிகளும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

இவன் யாரு இப்படி படம் எடுக்கிறதுக்கு..? ஆயிரத்தில் ஒருவன் தந்த வலி.. செல்வராகவன் எமோஷனல்

அந்த வகையில் ஓர் தனியார் தொண்டு நிறுவனம் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் தினந்தோறும் மதிய வேளையில் நோயாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் வழக்கமாக வழங்கப்படும் இடத்திலிருந்து தற்போது மருத்துவமனைக்கு வெளியே உணவு வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும், வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இப்படி இங்கு கொடுக்கப்படுவது என்ன காரணம் என்று பொதுமக்களிடம் கேட்ட போது, மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மன் ஹோட்டலுக்கு வியாபாரம் பாதிப்பை ஏற்படுத்துகிறது இந்த இலவச உணவு. மேலும் இதன் சுவையும் நன்றாக இருப்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதனால் மதிய வேளைகளில் அம்மன் ஹோட்டலில் வியாபாரம் டல்லடிக்க ஆரம்பித்திருக்கிறது.

இதனையடுத்து இலவச உணவு கொடுப்பவர்களிடம் இனி வெளியே உணவினை வழங்குமாறு உத்தரவு பறக்க பொதுமக்களுக்கு அது மிகுந்த அலைச்சலைக் கொடுத்துள்ளது. இதனால் சூரியின் அம்மன் ஹோட்டல் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டலில் உணவு வாங்கும் பணத்திற்கு ஏற்ப இல்லை என்றும், ஜி.எஸ்.டி முறையாகக் கட்டவில்லை எனவும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதில் சூரி உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளுடன் உடன் வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...