நாடு முழுவதும் டோல்கேட்டுகளில் குவியும் சுங்கவரி.. எந்த மாநிலத்தில் எவ்வளவு தெரியுமா?

Published:

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கீழ் நாடு முழுக்க நான்கு வழிச்சாலைகள், எட்டுவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு விரைவாகச் செல்லும் வகையில் பயண நேரம் பல மணி நேரம் குறைக்கப்படுகிறது. மேலும் கனரக வாகனப் போக்குவரத்திற்கும் நான்கு வழிச்சாலைகள் மிக ஏற்றதாக உள்ளது.

முதன் முதலாக வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கரச் சாலைத் திட்டம் உருவாக்கப்பட்டு நாடு முழுக்க முதன் முதலாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணி ஆரம்பமானது. அதன்பின் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விரிவடைந்து தற்போது மீண்டும் பா.ஜ.க.ஆட்சியில் ஒவ்வொரு இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் நான்குவழிச்சாலைகள் போடப்பட்டுள்ளது.

இந்த சாலைகள் அமைப்பதற்கான பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரிலையன்ஸ், டாடா, எல் அன் டி போன்ற நிறுவனங்களுக்கு வழங்கியது. சாலை அமைக்கத் தேவையான நிதியை அச்சாலை போடப்பட்ட 15 ஆண்டுகளுக்கு சுங்கவரி அல்லது சேவைக் கட்டணமாக வசூலித்துக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதியளித்ததை அடுத்து நாடு முழுக்க டோல்கேட் எனப்படும் சுங்கச் சாவடிகள் நிறுவப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை ரொம்ப நேரம் தூங்குறீங்களா? உங்களுக்குத்தான் இந்த நியூஸ்.. டாக்டர் சொல்லும் உண்மை

ஒவ்வொரு மாவடத்தினைக் கடக்கும் போது வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2023-24 புள்ளிவிபரப்படி தற்போது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சுங்கச் சாவடிகளில் ராஜஸ்தானில் மட்டும் அதிகபட்சமாக 131 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் 5,568 கோடி ரூபாய் ஆகும். அதேபோல் இரண்டாவது இடத்தில் உத்திரப்பிரதேசத்தில் 111 டோல்கேட்டுகளும் ரூ. 6902 கோடி வருமானமும் கிடைக்கிறது.

அதேபோல் தமிழகத்தில் 66 டோல்கேட்டுகள் உள்ளன. இதன் மூலம் மத்திய அரசுக்கு 4,222 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மிகக் குறைந்த பட்சமாக வடகிழக்கில் அமைந்துள்ள சிறிய மாநிலமான மேகாலயாவில் 4 டோல்கேட்டுகள் மட்டுமே உள்ளது. இதன் மூலம் ரூ. 96 கோடி ரூபாய் வரி வருமானம் கிடைக்கிறது.

இப்படி பல்லாயிரம் கோடி வருமானம் ஈட்டித் தருவதாக நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் உங்களுக்காக...