இவன் யாரு இப்படி படம் எடுக்கிறதுக்கு..? ஆயிரத்தில் ஒருவன் தந்த வலி.. செல்வராகவன் எமோஷனல்

Published:

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களுக்கு அடுத்து இயக்குநர் செல்வராகவனின் அற்புதமான படைப்பு ஆயிரத்தில் ஒருவன். கார்த்திக், பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா, நம்பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தினை இப்போது நாம் கொண்டாடி வருகிறோம். சோழப் பேரரசின் வீழ்ச்சியை அப்படியே பதிவு செய்திருப்பார் இயக்குநர் செல்வராகவன். இப்படத்திற்காக செல்வராகவன் டீம் பட்ட கஷ்டங்கள் ஏராளம். காடுகளிலும், பாலைவனத்திலும் இரவு பகல் பாராமல் உழைத்து தமிழ்சினிமா போற்றும் ஒரு படைப்பைப் கொடுத்தார்கள்.

ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தினைப் போற்றும் தமிழ் சினிமா படம் வெளிவந்த போது என்னவென்றே புரியாமல் படத்தினைத் தவிர்த்தனர். இதனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பட்ட கஷ்டங்களை இயக்குநர் செல்வராகவன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் எமோஷனலாகப் பகிர்ந்திருக்கிறார்.

அதில் ஆயிரத்தில் ஒருவன் படம் எடுக்கும் போது பாதிக்கும் முன்னரே இந்தப் படத்தின் பட்ஜெட் சொன்னதை விட இன்னொரு மடங்கு ஆகும் என தயாரிப்பாளரிடம் கூறினேன். அவரும் எதுவும் சொல்லாது தரமான படைப்பைக் கொடுக்க எண்ணி மேலும் 5 கோடி செலவழித்தார். ஆனால் அப்படியும் படம் முடியவில்லை. இதற்குமேலும் தயாரிப்பாளரிடம் கேட்டால் நியாயமாக இருக்காது என எண்ணி நானே மீதிப் படத்தினை தயாரித்து முடித்தேன். இதற்கான விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகளுக்காக இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறேன். மொத்த டீமும் தேள், அட்டை, பாம்புகளுக்கு மத்தியில் உழைத்தனர்.

எரிகிற தீயில் கொளுத்திப் போட்ட ராதிகா.. மலையாள திரைப் படத்துறை மீது சராமாரி புகார்

இந்த படம் வந்த போது அதுவரை தமிழ்சினிமா கண்ட அரசர்களின் வரலாற்றுப் பார்வை முற்றிலும் உடைக்கப்பட்டது. தீவிர ஆய்வுக்குப் பின்னர் இப்படித்தான் சோழர்கள் இருந்திருப்பார்கள் என கல்வெட்டுக்கள், தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகள் ஆகியவற்றை வைத்து சோழர்களை உருவாக்கினோம். கார்த்தி, பார்த்தீபன், ஆன்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்பைக் கொடுத்தனர். ஜி.வி.பிரகாஷ் அசுரத் தனமாக உழைத்தார். ராம்ஜியின் ஒளிப்பதிவு அபாரமானது.  தமிழில் இதுவரை இப்படி ஓர் அரசர்கள் படம் வந்தது கிடையாது.

இப்போது எடுக்கப்படும் மன்னர்கள் வரலாற்றுப் படங்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் அடித்தளம் இட்டது. இதேபோன்று இப்போது நிறைய சோழர்கள் வரலாறு எடுக்கப்படுகிறது. ஆயிரத்தில் ஒருவன் தமிழில் சரியாகப் போகாவிட்டாலும், தெலுங்கில் வெற்றி பெற்றது. எனவே தெலுங்குக்கு புரோமோஷன் பணிகளை அதிகப்படுத்தினோம்.

இப்படி பல வகைகளிலும் சோழர்களின் வரலாற்றினைக் காட்டிய போது இவன் யாரு இப்படி எல்லாம் படம் எடுப்பதற்கு என எனக்கெதிராக போஸ்டர்கள் ஒட்டினார்கள். ஆனால் நாங்கள் தரமான படைப்பினைக் கொடுத்திருக்கிறோம் என்பதில் நம்பிக்கையாக இருந்தோம். ஆயிரத்தில் ஒருவன் இப்போது கொண்டாடப்படுகிறது.

ஆனால் அதையொட்டி வந்த படங்களில் ஒரு நன்றி கூட தெரிவிக்காமல் சோழர்கள் இப்படித்தான் இருந்தார்கள்.. சோழர்கள் பயணம் தொடரும் என படங்களை எடுக்கின்றனர். அதற்கு முதல் அச்சாணியாக அமைந்தது ஆயிரத்தில் ஒருவன் படமே. இந்தப் படம் எனக்கு நிறைய வலிகளைத்தான் கொடுத்திருக்கிறது.” என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

மேலும் உங்களுக்காக...