வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய்… அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் என்ன தெரியுமா…?

Published:

குரங்கு அம்மை நோய் சின்னம்மை தட்டம்மை போன்ற மரபணுவை கொண்ட வைரஸ் நோயாகும். இது தற்போது உலகெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. இதை WHO ஒரு பொது சுகாதார அவசர நிலையாகவும் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் ஆரம்பித்த இந்த குரங்கு அம்மை நோய் தற்போது பாகிஸ்தான் பிறகு கேரளா வில் மூன்று பேர் உட்பட இந்தியாவில் பரவி வருகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன அதை தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

ஏற்கனவே சின்னம்மை தடுப்பூசி போட்டவர்களுக்கு குரங்கு அம்மை நோய் தொற்று ஏற்படும் அபாயம் குறைவு என்று கூறப்படுகிறது. அதையும் தாண்டி இந்த நோய் தாக்கப்பட்டால் அது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நோய் தாக்கப்பட்டால் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என கூறப்படுகிறது.

குரங்கு அம்மை நோயின் அறிகுறிகளாக சொல்லப்படுவது காய்ச்சல், தோள்களில் வெடிப்பு, கொப்புளங்கள் போல் தலை முதல் பாதம் வரை தோன்றுவது, தலைவலி போன்றவை ஆகும். நோய் ஏற்பட்ட பிறகு உண்டாகும் பாதிப்புகளில் கண் வலி, பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவை இருக்கும்.

ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டு விட்டால் உடனே அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களது துணிகளை பொருட்களை பிறர் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நோய் பரவாமல் இருக்க முக கவசத்தை அணிய வைக்க வேண்டும்.

குரங்கு அம்மை நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளாக கருதப்படுவது அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களின் பொருட்களை பயன்படுத்துவது பாலியல் தொடர்பில் இருப்பது குரங்கு அம்மை நோய் பரவும் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் சின்னம்மை தடுப்பூசியை போட்டுக் கொள்வதின் மூலம் குரங்கு அம்மை நோய் வராமல் தடுக்க முடியும்.

மேலும் உங்களுக்காக...