தெலுங்கானா அரசுக்கு கோரிக்கை வைத்த சமந்தா… காரணம் என்ன தெரியுமா…?

Published:

சமந்தா ருத் பிரபு தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். ஆரம்பத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக மாடலாக தனது கேரியரை தொடங்கியவர் சமந்தா.

முதலில் நகைக்கடை விளம்பரங்களில் தோன்றினார். அதன் மூலம் சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதலில் தெலுங்கு திரையுலகில் தான் அறிமுகமானார் சமந்தா. பின்னர் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் திருப்புமுனையை பெற்று முன்னணி நடிகையின் அந்தஸ்தை பெற்றார் சமந்தா.

அதற்குப் பிறகு பெரிய பட்ஜெட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார் சமந்தா. நான் ஈ, கத்தி, தெறி, பூஜை திரைப்படங்களில் நடித்துள்ளார் சமந்தா. அவரின் நடிப்பிற்காக சைமா விருது, பிலிம்பேர் விருது, நந்தி விருது, விஜய் வருது ஆகியவைகளை வென்றவர் சமந்தா.

சமீபத்தில் ஹேமா கமிட்டி குழு மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக அறிக்கையை வெளியிட்டது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதன் எதிரொலியாக மோகன்லால் உட்பட நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இது சம்பந்தமாக பல நடிகர் மற்றும் நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சமந்தா இன்ஸ்டாவில் ஒரு பதிவிட்டிருந்தார். அது என்னவென்றால் ஹேமா குழு கமிட்டி மலையாள திரை உலகில் பாலியல் துன்புறுத்துகள் இருப்பதை அறிவித்தது போலவே தெலுங்கு திரை உலகில் தி வாய்ஸ் ஆப் உமன் என்ற குழு விசாரணை நடத்திய தெலுங்கு சினிமாவை பற்றிய அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெலுங்கானா அரசுக்கு கோரிக்கையும் வலியுறுத்தியும் அந்த பதிவில் எழுதி பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா. இது இணையத்தில் பரவி பேசப்பட்டு வருகிறது.

மேலும் உங்களுக்காக...