வாழை திரைப்படத்தில் காட்டப்பட்ட கோர விபத்தின் நிஜ பின்னணி… விபத்தில் உயிர் பிழைத்த பெண் பேட்டி…

By Meena

Published:

மாரி செல்வராஜ் தயாரித்து எழுதி இயக்கிய திரைப்படமான வாழை தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை மையமாகக் கொண்டு உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வாழை திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று இந்த ஆண்டிற்கான சிறந்த படம் என்று மக்கள் சொல்லும் அளவிற்கு பாராட்டுகளை பெற்றது.

பாலா, தனுஷ், சூரி, மணிரத்தினம், ஷங்கர், கார்த்தி, விக்னேஷ் சிவன் போன்ற திரை பிரபலங்கள் முதல் நெட்டிசன்கள் பொதுமக்கள் வரை அனைவரும் இந்த படத்தை புகழ்ந்தனர். அப்படி ஒரு தாக்கத்தை இந்த படத்தின் மூலம் ஏற்படுத்திவிட்டார் மாரி செல்வராஜ். படம் முடிந்து வெளியே வரும்போது அனைவரும் கண்களில் கண்ணீரோடே வெளியே வந்தனர். அப்படி இந்த படத்தில் காண்பிக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் உயிருள்ளதாக இருந்தது. படத்தில் மக்களின் மனதை தொட்ட ஒரு காட்சி என்றால் கிளைமாக்ஸ் காட்சியில் வரக்கூடிய லாரி கவிழ்ந்த கோர விபத்து ஆகும்.

இந்த லாரி வயலுக்குள் தலைகீழாக விழுந்து கோர விபத்து ஆனதில் கிட்டத்தட்ட 19 பேர் பலியானதாக வாழை திரைப்படத்தில் காட்டி இருப்பார்கள். தற்போது நிஜத்தில் அந்த கோர விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து தனது இரு கால்களையும் இழந்த ஒரு பெண்மணி பேட்டி அளித்திருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால், அந்த விபத்தில் நானும் இருந்தேன். படத்துல காட்டினது எல்லாமே உண்மை சம்பவம் தான். எதுவுமே பொய்யானது கிடையாது. அந்த டிரைவர் ராத்திரி ஆனதுனால ஒரு நிமிஷம் கண் அசைந்ததுனால லாரி அப்படியே வயலுக்குள்ள கவுந்துட்டு. நான் கீழ கிடந்தேன். என்னோட உடம்பு எல்லாம் வெளியே இருந்தது என் கால் மட்டும் லாரிக்கு கீழ மாட்டிருச்சு. அதனால என் கால காப்பாத்த முடியல. ரெண்டு காலையுமே எடுத்துட்டாங்க. அந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 25 வருஷம் ஆகப்போகுது. நான் இன்னும் வீட்டுக்குள்ளே தான் முடங்கி கிடக்கிறேன். மேலும் அந்த படத்துல நாங்க வாழ சுமந்தது கூலி உயர்வு கூட்டி கேட்டது எல்லாமே உண்மையா நடந்தது கடைசியா நாங்க வாழதார் தூக்குவதற்கு நாங்க வாங்கின கூலி ஒன்னேகால் ரூபா. அப்போதான் அந்த ஆக்சிடென்ட் நடந்துருச்சு. நான் படத்தை பார்க்கும் போது அவ்வளவு கண்ணீரா வருது. மனசு தாங்கல என்று கூறி இருக்கிறார் அந்த விபத்தில் சிக்கி தவித்து உயிர் பிழைத்த பெண்மணி பரிமளா.

மேலும் உங்களுக்காக...