சூர்யா-44 படத்திற்கு வந்த சிக்கல்… படக்குழுவினர் மீது புகார்… நீலகிரி போலீஸ் விசாரணை…

Published:

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த நடிகர் சிவகுமாரின் மகன் தான் நடிகர் சூர்யா. இவரின் இயற்பெயர் சரவணன் என்பதாகும். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா.

1997 ஆம் ஆண்டு தனது 22 வது வயதில் ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சூர்யா. 2001 ஆம் ஆண்டு ‘நந்தா’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். பின்னர் ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘கஜினி’ போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் சூர்யா. 2009 ஆண்டு சிங்கம் படத்தில் நடித்த தொடங்கிய பிறகு நட்சத்திர அந்தஸ்தை பெற்று முன்னணி நடிகர்களுள் ஒருவரானார் சூர்யா.

இந்த ‘சிங்கம்’ படம் 3 தொடர்களை கொண்டது. தொடர்ந்து ‘ஏழாம் அறிவு’, ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார் சூர்யா. தனது நடிப்பு திறமைக்காக இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், 6 பிலிம்பேர் விருதுகள், 5 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் ஆகியவற்றை வென்றுள்ளார் சூர்யா.

தற்போது சூரியா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் தற்போது படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அந்தப் படத்திற்கு சூர்யா 44 என்று பெயரிடப்பட்டுள்ளது.

சூர்யா 44 திரைப்படத்தின் படப்பிடிப்பு நீலகிரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் சூர்யாவுக்கு அந்த படப்பிடிப்பின் சண்டைக்காட்சியின் போது தலையில் காயம் ஏற்பட்டதாக கூட செய்திகள் வெளியாயின. அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த சூர்யா 44 நீலகிரியில் நடக்கும் படப்பிடிப்பில் அனுமதி பெறாமல் ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் நடிப்பதாக புகார் எழுந்துள்ளது. தற்போது அந்த புகாரினை ஏற்று நீலகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...