மகனின் நண்பருடன் 50 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல்.. அம்மா காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய மகன்.. தற்போது கர்ப்பம்.. ஒரு விசித்திரமான காதல் கதை..!

சீனாவின் 50 வயது பெண் ஒருவர் தனது மகனின் வகுப்புத்தோழரை மணந்து, கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததன் மூலம் வைரலாகியுள்ளார். சிஸ்டர் சின் என்ற பெயரை கொண்ட சீன பெண், இகாமர்ஸ் தொழிலபதிராக உள்ளார். விவாகரத்து…

love

சீனாவின் 50 வயது பெண் ஒருவர் தனது மகனின் வகுப்புத்தோழரை மணந்து, கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததன் மூலம் வைரலாகியுள்ளார்.

சிஸ்டர் சின் என்ற பெயரை கொண்ட சீன பெண், இகாமர்ஸ் தொழிலபதிராக உள்ளார். விவாகரத்து பெற்ற இவர், தனது மகன் மற்றும் மகளை தனியாக வளர்த்து வந்தார். சீன சமூக வலைத்தள தளமான டூயினில் 13,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை கொண்ட இவர் ஒரு ஆடம்பரமான தினசரி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தான் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு ஒரு புதிய காதல் தொடங்கியது. இவரின் மகன் கைகாய், ரஷ்ய மாணவர் டெஃபு உட்பட மூன்று வெளிநாட்டு வகுப்பு தோழர்களை புத்தாண்டு இரவு உணவிற்கு வீட்டுக்கு அழைத்தபோது இந்த காதல் மலர்ந்ததாக தெரிகிறது. மகனின் நண்பர் டெஃபு, ரஷ்யாவை சேர்ந்தவராக இருந்தாலும் சரளமாக சீன மொழி பேசுபவர். சிஸ்டர் சினின் சமையல் மற்றும் விருந்தோம்பலால் ஈர்க்கப்பட்ட டெஃபு, முதலில் ஒரு இரவு மட்டும் தங்க திட்டமிட்டிருந்த நிலையில் சில காரணங்களால் ஒரு வாரம் தங்கினார்.

20 ஆண்டுகளுக்கும் மேல் சிஸ்டர் சின் மற்றும் டெஃபு இடையே வயது வித்தியாசம் மற்றும் இருந்தபோதிலும், சிஸ்டர் சின் ஆரம்பத்தில் கலாச்சார வேறுபாடுகள் மற்றும் அவரது கடந்தகால தோல்வியுற்ற திருமணத்தை காரணம் காட்டி டெஃபு காதலை நிராகரித்தார். ஆனால் இந்த காதலுக்கு தனது மகனே ஊக்கம் அளித்ததால், அவர் இறுதியில் இந்த காதலை ஏற்றுக்கொண்டார். இந்த ஜோடி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தங்கள் திருமணத்தை பதிவு செய்துள்ளனர், மேலும் அதன்பின்னர் சீனா முழுவதும் இருவரும் தேனிலவு பயணம் செய்தனர்.

இந்த நிலையில் தான் ஜூன் 8 அன்று, சிஸ்டர் சின் தனது கர்ப்பத்தை ஒரு சமூக வலைத்தள வீடியோ மூலம் அறிவித்தார். அதில், “முதுமையில் கர்ப்பம் தரிப்பது ஆபத்துக்களை கொண்டது, ஆனால் டெஃபுவால் உருவான குழந்தையை நான் பெற்றெடுக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

இணைய பயனர்கள் அவர்களது உறவின் சட்டபூர்வமான தன்மையை பற்றி கேள்வி எழுப்பியபோது, “நேரம் எங்கள் காதலை நிரூபிக்கும்” என்று அவர் மேலும் கூறினார். அடுத்த வசந்த காலத்தில் குழந்தை பிறக்கவிருப்பதாகவும், சிஸ்டர் சின் அவர்கள் ஆவலுடன் தொட்டில் வாங்கியுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.