டிரம்ப் இல்லத்தின் மேல் பறந்த 3 மர்ம விமானங்கள்.. விரட்டியடித்த போர் விமானங்கள்..!

  அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு சொந்தமான ரிசார்ட் மீது மூன்று மர்மமான விமானங்கள் பறந்ததாகவும், உடனடியாக போர் விமானங்கள் அவற்றை விரட்டி அடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு…

trump

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு சொந்தமான ரிசார்ட் மீது மூன்று மர்மமான விமானங்கள் பறந்ததாகவும், உடனடியாக போர் விமானங்கள் அவற்றை விரட்டி அடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அவருக்கு வெளிநாட்டு சக்திகளிடமிருந்து ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டிரம்ப்க்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டிரம்ப் அவர்களுக்கு சொந்தமான ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ரிசார்ட் மீது திடீரென மூன்று மர்மமான விமானங்கள் பறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, உடனடியாக வான்  பாதுகாப்பு கட்டுப்பாட்டு துறை எப்-16 போர் விமானங்களை அனுப்பி, அந்த மூன்று விமானங்களையும் விரட்டியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் விமானங்கள் ஒளிரும் ஒரு பொருளை பயன்படுத்தி, இந்த பகுதியை “விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி” என்று உணர்த்தியதாகவும், இதனை அடுத்து அந்த மூன்று விமானங்களும் அந்த பகுதியில் இருந்து வேறு பாதைக்கு சென்றதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

முதல் கட்ட விசாரணையில், அந்த மூன்று விமானங்களும் பயணிகள் விமானங்களாக இருக்கலாம் என்றும், அவை பாதை தவறி வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த போது, ட்ரம்ப்  ரிசார்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ட்ரம்ப் அவர்களுக்கு சொந்தமான எந்த ஒரு இல்லத்தின் மீதும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  அந்த பகுதியில் உள்ள ட்ரம்ப் மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

டிரம்ப்க்கு சொந்தமான ரிசார்ட்கள் மற்றும் இல்லத்தின் மீது மர்ம விமானங்கள் பறப்பது இதுவே முதல் முறையல்ல. ஏற்கனவே, அவர் பதவியேற்ற நாளிலிருந்து இதுவரை மூன்று முறை மர்ம விமானங்கள் அத்துமீறி பறந்துள்ளதாக விமான பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.