35 ஆண்டுக்கு முன் 1 லட்ச ரூபாய்க்கு அப்பா வாங்கிய பங்கு.. இன்றைய மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?இன்ப அதிர்ச்சியில் மகன்..!

  ரெடிட் பயனாளர் ஒருவர் 35 ஆண்டுகளுக்கு முன்னர் தனது அப்பா வாங்கி வைத்த பங்கு பத்திரங்களை தற்செயலாக தற்போது கண்டுபிடித்ததாகவும், அப்போது ஒரு லட்ச ரூபாய் விலையில் வாங்கிய பங்கின் மதிப்பு இன்றைய…

jsw

 

ரெடிட் பயனாளர் ஒருவர் 35 ஆண்டுகளுக்கு முன்னர் தனது அப்பா வாங்கி வைத்த பங்கு பத்திரங்களை தற்செயலாக தற்போது கண்டுபிடித்ததாகவும், அப்போது ஒரு லட்ச ரூபாய் விலையில் வாங்கிய பங்கின் மதிப்பு இன்றைய நிலையில் 80 கோடி ரூபாய் மதிப்பு உடையது என்பதை அறிந்து தான் ஆச்சரியப்பட்டதாகவும் பகிர்ந்து உள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

ரெடிட் பயனாளர் சௌரவ் தத்தா என்பவர் 1990களில் தனது தந்தை வாங்கிய JSW ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகளை இப்போது தற்செயலாக கண்டுபிடித்து உள்ளார். வீட்டை சுத்தப்படுத்தும் போது தனது அப்பா வாங்கிய பங்கு பத்திரங்களை பார்த்ததாகவும், 30 ஆண்டுகள் வைத்திருந்த விளைவாக அவை தற்போது 80 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கின்றன என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவை பலரது கவனத்தை பெற்றுள்ளது. ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், “உங்கள் அப்பா ஒரு நல்ல முதலீட்டு நிறுவனத்தை தேர்வு செய்து முதலீடு செய்து உள்ளார்” என்று வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

பங்குச்சந்தையில் JSW நிறுவனத்தின் பங்குகள் உயர்வு, போனஸ், லாபம் ஆகியவற்றை கணக்கிட்ட போது 80 கோடி தற்போதைய மதிப்பு உள்ளது என பங்குச்சந்தை நிபுணர்கள் அவருக்கு கூறியுள்ளனர்.

உண்மையிலேயே இது ஒரு மாயாஜாலம் என்றும், நீண்ட காலம் முதலீட்டின் சக்தி இதுதான் என்றும் தத்தா பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு பலர் அறிவுரை கூறி வருகின்றனர்.

“இந்த பணத்தை வைத்து ஒரு நல்ல தொழில் செய்யுங்கள்” என்று கூறியுள்ள நிலையில், சிலர் 80 கோடி ரூபாயை அப்படியே மியூச்சுவல் ஃபண்டில் போட்டுவிட்டு மாதம் 80 லட்சம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

இரும்பு மற்றும் எக்கு தொழில் செய்யும் நிறுவனம் தான் JSW ஸ்டீல் லிமிடெட் என்பதும், தற்போது இதன் ஒரு பங்கு ஆயிரம் சுமார் 1500 ரூபாய் என உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த பல ஆண்டுகளில் இந்த நிறுவனம் தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், முதலீட்டாளர்களுக்கு சீரான நல்ல பலன்களை வழங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டில் குறைந்தது 20 ஆண்டுகள் முதலீடு செய்தால் மிகப்பெரிய பலனை அனுபவிக்கலாம் என்றும், அதனால் தான் வேலைக்கு சேர்ந்த உடனே, அதாவது 20 முதல் 25 வயதிலேயே முதலீடு செய்தால் ஓய்வு பெறும் போது ஒரு மிகப்பெரிய தொகை அவர்களுக்கு கிடைக்கும் என்றும், அவ்வப்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது.