3 வருட, 4 வருட கல்லூரி படிப்பு காலம் முடிந்துவிட்டது.. இனி வாழ்நாள் முழுவதும் படித்தால் தான் வேலை.. Zerodha நிகில் காமத்

  மூன்று வருட கலை அறிவியல் கல்லூரி படிப்பு, அல்லது நான்கு வருட தொழில்நுட்ப படிப்பு முடிந்துவிட்டால், அதன் பிறகு வேலைக்கு சேர்ந்துவிடலாம். பின்னர் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் தற்போதைய நிலையாக…

learning

 

மூன்று வருட கலை அறிவியல் கல்லூரி படிப்பு, அல்லது நான்கு வருட தொழில்நுட்ப படிப்பு முடிந்துவிட்டால், அதன் பிறகு வேலைக்கு சேர்ந்துவிடலாம். பின்னர் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது. ஒரு டிகிரி முடித்துவிட்டு, அதில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிட்டால், ஒரு நல்ல நிறுவனத்தில் அல்லது அரசு வேலை கிடைத்துவிடும். அதன் பிறகு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம்; பின்னர் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் இதுவரை ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிலையாக இருந்தது. ஆனால், இப்போது மூன்று வருட, நான்கு வருடப் படிப்பு காலம் எல்லாம் முடிந்துவிட்டது என்றும், வாழ்நாள் முழுவதும் படித்தால்தான் இனி வேலையில் சேர முடியும் அல்லது கிடைத்த வேலையில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்றும் ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தின் சமீபத்திய அறிக்கையில், 38 சதவீத நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் திறமைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளன. வேலைக்கு சேரும்போது திறமையாக இருந்தாலும், அதன் பிறகு வரும் புதிய தொழில்நுட்ப அப்டேட்டுகளை அவர்கள் தெரிந்துகொள்வதில்லை என்றும், அதனால் நிறுவனத்தின் வளர்ச்சி தடைபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் எடுக்கப்பட்ட தொழிலாளர்களின் திறமை குறித்த கருத்துக்கணிப்பில், பல ஊழியர்களுக்கு திறமை மேம்பாடு இல்லை என்றும், பதவிகளில் தொடர பயிற்சி பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்றும், அல்லது பயிற்சி பெறாமல் பணியிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதற்கு முன்பு இருந்தது போல், ஒரு டிகிரி படித்துவிட்டோம், வேலையில் சேர்ந்துவிட்டோம், வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டோம் என்று இனிமேல் இருக்க முடியாது என்றும், தொடர்ந்து தங்களுடைய வேலை தொடர்பான விஷயங்களை படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், அதன்படி வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருந்தால்தான் வேலையில் தொடர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவின் அபாரமான வளர்ச்சி மனிதர்களின் வேலைகளை விழுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ‘வாழ்நாள் முழுவதும் கற்றல்’ என்ற ஒரு கொள்கையை எடுத்தால் மட்டுமே வேலைகளில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு சந்தையில் தனியார்மயமாக்கலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை, தொடர்ந்து அப்டேட்டில் இருக்கும் ஊழியர்கள் மட்டுமே பணியில் நீடித்திருப்பார்கள் என்றும், இல்லையென்றால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், அதே நேரத்தில், நிறுவனங்களின் முதலாளிகளும் தங்கள் ஊழியர்களுக்கு திறமையை வளர்த்துக்கொள்ள பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்றும், குறிப்பாக AI கருவிகளில் ஒவ்வொரு ஊழியர்களின் வேலை தொடர்பான படிப்புகளை படிப்பதற்கு அவர்களே ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றும், தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப தொழிலாளர்களும் மாறிக்கொள்ள வேண்டும் என்றும் பல முதலாளிகள் நினைக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

எனவே, 3 வருடம் அல்லது 4 வருட டிகிரி படித்துவிட்டு, வேலையில் சேர்ந்துவிட்டோம் என்று அசால்ட்டாக இருக்காமல், தொடர்ந்து ஊழியர்கள் தங்களுடைய வேலை சம்பந்தமான அப்டேட்டுகளை படித்துக்கொண்டே இருப்பதுதான் அவர்களது வேலைக்கு உத்தரவாதமாக கருதப்படுகிறது.