இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஐபோன்களுக்கு 25% வரி.. டிரம்பின் இன்னொரு கோமாளித்தனமான அறிவிப்பு..!

  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் ஐபோன்கள் தயாரித்தால் 25 சதவீத வரி விதிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த…

iphone trump

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் ஐபோன்கள் தயாரித்தால் 25 சதவீத வரி விதிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த வெள்ளிக்கிழமை, ஆப்பிள் நிறுவனம் இந்தியா அல்லது வேறு எங்கும் ஐபோன்கள் தயாரிப்பதை தொடர்ந்தால், 25 சதவீத வரி விதிக்கப்படுமென்று மிரட்டினார். சமூக ஊடகத்தில் டிரம்ப்பின் இந்த மிரட்டல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“நான் ஆப்பிள் தலைவரான டிம் கூக்கிடம் ஏற்கனவே தெரிவித்தேன். அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவில் தான் தயாரிக்கப்பட வேண்டும், இந்தியா அல்லது வேறு எங்கும் அல்ல,” என்று கூறியதாக டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தா. இல்லையேல் ஆப்பிள் நிறுவனத்துக்கு குறைந்தபட்சம் 25% வரியை அமெரிக்காவுக்கு கட்டவேண்டும், என்று அவர் மேலும் கூறியிருந்தார்.

இத்தகைய சமூக ஊடக எச்சரிக்கை ஐபோன்களின் விலையை பெரிதும் உயர்த்தக்கூடும், இது அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் விற்பனை மற்றும் இலாபங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தான் இன்று திடீரென இந்தியாவில் தயாரித்து அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% என உத்தரவை பிறப்பித்துள்ளார். சொந்த நாட்டு மக்களுக்கே 25% வரி விதிக்கும் கோமாளித்தனமான அறிவிப்பு என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில், ஆப்பிள் இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை குறைப்பதற்கான எந்த அறிகுறியுமில்லை. இந்திய அரசாங்கத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறியபோது, டிரம்பின் கருத்துப்பிரகடனத்துக்குப் பிறகு ஆப்பிள் நிர்வாகத்துடன் அதிகாரிகள் பேசி, இந்தியாவில் ஆப்பிளின் முதலீட்டு திட்டங்கள் முடிவெடுத்தவை என்று கூறியுள்ளனர்.

“ஆப்பிள் தனது இந்திய முதலீட்டு திட்டங்கள் உறுதியானவை என்றும், இந்தியாவை தனது முக்கிய உற்பத்தி நிலையமாக தொடரும் என்றும் தெரிவித்துள்ளது,” என்றும் அவர் மேலும் கூறினார்,.

ஆப்பிள் தற்போது ஆண்டுக்கு சுமார் 4 கோடி ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. இது அதன் உலகளாவிய உற்பத்தியில் சுமார் 15% ஆகும். தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரானிலிருந்து பணிகளை சமீபத்தில் எடுத்துக் கொண்ட டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை உற்பத்தியை முன்னிலை வகிக்கின்றன. இந்த நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை விரிவுபடுத்தி, புதிய பிளாண்டுகள் மற்றும் உற்பத்தி வரிசைகள் அமைத்துக் கொள்ளும் பணியில் உள்ளன.

இந்தியா அரசு ஆப்பிளின் தொழிற்சாலையை முக்கிய பொருளாதார வளமாக கருதுகிறது. கடந்த மாதம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாவது, இந்தியா 2025வது நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன் தயாரிப்பால் 2,00,000 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.