உங்களை யாராவது தவறாகப் புரிந்து கொண்டார்களா? நீங்கள் கொடுக்கும் சிறப்பான பதிலடி இதுதான்!

எல்லோருடைய இதயங்களும் ஒரே அளவில் தான் இருக்கிறது, ஆனால் எல்லோர் இதயங்களிலும் கருணையும், மனிதநேயமும் தான் ஒரே அளவில் இருப்பதில்லை, நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே எனப் புலம்பாமல் நம்மை இவ்வளவுதான் புரிந்து வைத்துள்ளார்கள்…

எல்லோருடைய இதயங்களும் ஒரே அளவில் தான் இருக்கிறது, ஆனால் எல்லோர் இதயங்களிலும் கருணையும், மனிதநேயமும் தான் ஒரே அளவில் இருப்பதில்லை, நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே எனப் புலம்பாமல் நம்மை இவ்வளவுதான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகிவிடுவதே சிறப்பான பதிலடி. நாம் தொலைந்தால் தேடும் அளவிற்கு இல்லாவிட்டாலும், நம்மைப் பார்த்து யாரும் ஒளிந்து கொள்ளாத அளவிற்கு ஒரு வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும்.

தொலைநோக்குச் சிந்தனை, எதிலும் நேர்நிலையான பார்வை, விடாமுயற்சி, உழைப்பின் மீதான நம்பிக்கை, எந்த நேரத்திலும் எதற்காகவும் துவண்டு போகாத மனோதைரியம், குழப்பம் இல்லாமல் முடிவுகளை எடுக்கும் திறன், மற்றவர் கருத்துக்கும் மதிப்பளித்துக் கேட்கும் மனப்பான்மை இவையனைத்தும் யாரிடம் இருக்கிறதோ அவரே வெற்றியாளர்.

வெற்றியாளரின் வாழ்க்கை வரலாற்றைப் பாருங்கள். மேலே குறிப்பிட்ட அத்தனை விசயங்களையும் அவர்கள் கடைபிடித்திருப்பார்கள். வெற்றியாளராவது என்பது 3 நிமிடத்தில் ஒரே பாடலில் பணக்காரர் ஆகும் திரைப்படம் போன்றதல்ல. பல நாள், பல போராட்டங்களைச் சந்தித்து நல்ல அனுபவங்களை
கற்றுக் கொண்டால்தான் வெற்றிபெற முடியும்.

எவ்வளவு கடுமையாக உழைக்கிறீர்கள் என்பதைச் சொல்லாதீர்கள். எவ்வளவு சாதித்தீர்கள் என்று சொல்லுங்கள் என்கிறார் ஜேம்ஸ் லிங்க் என்ற அறிஞர். எனவே நாம் எவ்வளவு உழைத்தோம் என்பதைவிட, எவ்வளவு சாதித்தோம். ஒரு சாதனையாளராய் வெற்றியாளராய் இருக்கிறோம் என்பதே முக்கியம்.

நான் எனக்கு மட்டும் அது கிடைத்திருந்தால் நல்ல வாய்ப்பு எனக்கு வாய்த்திருந்தால், நானும் ஜெயித்திருப்பேன். என்ன செய்வது கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று புலம்பும் சிலரை நாம் பார்த்திருப்போம். இவர்கள் இப்படி சாக்குபோக்கு சொல்லியே தோற்றுப் போகிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் தங்களின் அடையாளத்தையும் தொலைத்து விடுகிறார்கள்.