உலகில் மகிழ்ச்சி எதில் உள்ளது? இது ஒரு புது ரகசியம் தான்!

மனித சக்தி எல்லை இல்லாதது. கைகளைப் போல் ஒரு நண்பன் இல்லை. கால்களைப் போல் ஒரு சொந்தம் இல்லை. உழைப்பதை போல் ஒரு இன்பம் இல்லை. இதை உணர்ந்தவர்கள் வாழ்வில் கவலை இல்லை. மகிழ்ச்சி…

மனித சக்தி எல்லை இல்லாதது. கைகளைப் போல் ஒரு நண்பன் இல்லை. கால்களைப் போல் ஒரு சொந்தம் இல்லை. உழைப்பதை போல் ஒரு இன்பம் இல்லை. இதை உணர்ந்தவர்கள் வாழ்வில் கவலை இல்லை. மகிழ்ச்சி நாம் சேர்த்து வைக்கும் பொருள்களில் இல்லை. நல்ல மனிதர்களை சேமிப்பதில் உள்ளது. முயற்சிக்கு வயதில்லை. முயன்றவருக்கு தோல்வியில்லை!

சூரியனுக்காய் காத்திருக்கிறது சூரியகாந்தி. நிலவுக்காய் காத்திருக்கிறது அல்லி. அசைதலுக்காக காத்திருக்கிறது மரம். மழைக்காக காத்திருக்கிறது நிலம். மனிதன் மட்டும் தேவையில்லாத விசயங்களுக்காக காத்திருக்கிறான்.

சலிக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் போராட்டமான வாழ்க்கையில் கிடைக்குமிடத்தில் சற்று ஓய்வெடுக்கும் வேளையில் இவனுக்கென ராஜவாழ்வென உச்சிக்கொட்டி கடப்பவர்களே அதிகம்.

உங்களது சில முடிவுகளில் பிடிவாதமாய் இருங்கள். சில மனிதர்களை இழக்க நேரிடலாம். ஆனால், உங்களை காப்பாற்றிக்கொள்ளலாம். ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடக்க குறைந்தபட்சம் 4 நிமிடங்கள் வேண்டும் என்று பல காலமாக எல்லாரும் நம்பி இருந்தார்கள்.

1954 ஆம் ஆண்டு வரை வெளியான எல்லா அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மனித உடலால் அதற்கு மேல் வேகமாக ஓட முடியாது என்று ஒருமித்த கருத்தை அற்வித்தன. ஆனால் 1954 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி ரோஜர் பேனிஷ்டர் என்பவர் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்கு முன்னதாக ஓடிக் கடந்து அது வரை நிலவிய அறிவியல் நம்பிக்கையைப் பொய் ஆக்கினார்.

அவர் பயிற்சியின் போது தன் இலக்கான மைலை நான்காகப் பிரித்துக் கொண்டார். ஒவ்வொரு கால் மைலையும் 58 வினாடிகளுக்கு முன் கடக்க வேகத்தை மேற்கொண்டார். மிகவும் கஷ்டமான அந்த வேக இலக்கை எட்டி சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வார். பின் அடுத்த கால் மைலைக் கடப்பார்.

பல முறை பயிற்சி எடுத்து சிறிது சிறிதாக வேகத்தைக் கூட்டி, ஓய்வைக் குறைத்துக் கொண்டு வந்தார். கடைசியில் அவர் பந்தயத்தில் 3 நிமிடம் 59.6 வினாடிகளில் அந்த மைல் இலக்கைக் கடந்தார். அடுத்த 4 வருடங்களில் அவரைப் போல் 46 பேர் அந்த “ஓரு மைல் 4  நிமிடம்” என்ற உடற்கூறு ஆராய்ச்சியளர்களின் கருத்தை முறியடித்தார்கள்.