இந்த பத்து கட்டளைகளை தினசரி பாலோ பண்ணுங்க.. எழுத்தாளர் சுஜாதா சொன்ன லைப் ஃஸ்டைல் சீக்ரெட்ஸ்..

By John A

Published:

இந்தியன் 2 படத்தினைப் பார்த்தவர்களுக்கு மட்டும் தான் எழுத்தாளர் சுஜாதாவை நாம் எவ்வளவு மிஸ் செய்திருக்கிறோம் என்பது தெரியும். அடுத்த 50 ஆண்டுகளில் என்ன வரப்போகிறது என்பதை ஒரு அசரீரியாக தனது எழுத்துக்களில் புதைத்து வைத்துச் சென்றிருக்கிறார் எழுத்தாளர் சுஜாதா. இவரின் எழுத்துககளைப் படித்தவர்களுக்கு வாழ்க்கை முறை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்தும் அத்துப்படியாகும்.

இயக்குநர் ஷங்கரின் படங்கள் என்றென்றும் பேசப்படுவதற்கு சுஜாதாவின் வசனங்களும் ஓர் முக்கியக் காரணம். எழுத்தாளர் சுஜாதா மனித வாழ்வுக்கு முக்கியமான பத்து கட்டளைகளை நமக்கு விடுத்துச் சென்றிருக்கிறார். இந்த பத்து கட்டளைகளும் மனித வாழ்வு செழிக்க பத்து பொக்கிஷங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்திய ரயில்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய பேஷியல் சாதனம்.. ஒவ்வொரு ரயிலிலும் 8 கேமிராக்கள்..!

  1. நாம் ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும். அது கடவுளாகட்டும், இயற்றையாகட்டும். ஆனால் அது கேள்வி கேட்கக் கூடாது நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
  2. பெற்றோர் சொல்லும் வேலைகளும், அறிவுரைகளும் எரிச்சலாகத் தான் வரும். ஆனால் ஒரு மாறுதலுக்காகவாது அதனைச் செய்து பாருங்கள்.
  3. சினிமாவுக்குப் போவதென்றால் எக்காரணம் கொண்டும் மேட்னி ஷோ போய் பார்க்காதீர்கள். அது உங்களின் அன்றைய நாளையே விழுங்கி விடும்.
  4. தினசரி குறைந்தது 4 பக்கங்களாவது உங்களுக்குப் பிடித்தவற்றை வாசிக்கப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
  5. ஒரு ஐந்து ரூபாயாவது உங்களின் தினசரி சொந்த வருமானமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
  6. நம் நிலையை எண்ணிப் புலம்பாது நமக்கும் கீழுலுள்ள மக்களைப் பற்றி ஒருமுறையாவது யோசித்துப் பாருங்கள்.
  7. ஞாயிற்றுக்கிழமை அன்று என்ன வேலை வேண்டுமானலும் செய்யுங்கள். காதலைத் தவிர. காதல் பொய் சொல்ல வைக்கும். தேவையில்லாத இடங்களில் காத்திருக்க வைக்கும். இந்த வயசுல உங்களுக்குத் தேவை படிப்பு மட்டும்தான். அத மட்டும் செய்யுங்க.
  8. தினசரி ஒரு கிரவுண்டை 8 முறையாவது சுற்றி வாருங்கள். உடலுக்கு வேலை கொடுக்கும் போது மூளை சுறுப்சுறுப்பாகும். நல்ல தூக்கம் வரும். காதல் போன்ற தேவையற்ற சிந்தனைகள் எழவே எழாது.
  9. தினசரி 9 மணிக்குள் வீட்டுக்குள் வந்து விடுங்கள். இரவு லேட்டாக வருவதில் தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.
  10. தினசரி குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது வீட்டில் உள்ளவர்களிடம் அன்றைய நாள் பற்றி, அலுவலகம் பற்றி, பள்ளி கல்லூரி பற்றி ஏதாவது பேசுங்கள்.

இந்த 10 கட்டளைகளையும் கடைப்பிடித்துப் பாருங்கள். வாழ்க்கை ஜெட் வேகத்தில் எப்படி முன்னேறுகிறது என்று.