குழந்தைக்கு தாகம் எடுக்காதா? பிறந்த 6 மாதத்திற்குள் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்க கூடாதா?

Published:

தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினங்களாலும் வாழ முடியாது. சிறிய உயிரினம் தொடங்கி பெரிய உயிரினங்கள் வரை அனைத்திற்கும் தண்ணீர்  பொதுவான ஒன்று. அதுவும் அடிக்கின்ற வெயிலில் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடித்தாலும் தாகம்  தீர்ந்தபாடில்லை என்று பலர் புலம்புவதுண்டு. பெரியவர்கள் நமக்கே வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றும் பொழுது குழந்தைகளுக்கு தண்ணீர் தாகம் எடுக்காதா? பிறந்து ஆறு மாதம் வரை குழந்தைக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக் கூடாது? என்று பலருக்கு கேள்விகள் எழலாம்.

baby with mom

இன்னும் சில இடங்களில் மருத்துவர் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது என்று அறிவுரை கூறினாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் “அதெல்லாம் குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கலாம். நாங்கள் எல்லாம் கொடுத்து தான் வளர்த்தோம்.” என்று அறிவுரை என்ற பெயரில் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கூறி மேலும் குழப்புவார்கள். இதில் எதைப் பின்பற்றுவது என்று இளம் தாய்மார்களுக்கு குழப்பம் ஏற்படலாம். அதற்கு முதலில் ஏன் தண்ணீர் கொடுக்கக் கூடாது? என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.

baby waterr

குழந்தைகளின் உடல் 75% நீரால் நிரம்பி உள்ளது. பெரியவர்களின் உடலில் 50 முதல் 55 சதவீதம் தான் தண்ணீர் உள்ளது. ஏற்கனவே நீரால் நிரம்பி உள்ள குழந்தையின் உடலில் மேலும் தண்ணீர் செல்லும் பொழுது அதனை ஏற்கும் சக்தி அந்த குழந்தையின் உடலுக்கு கிடையாது.

மேலும் தாய்ப்பாலில் 85 சதவிகிதம் தண்ணீர் உள்ளது இதனால் தனியாக குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தண்ணீரை குழந்தைகள் குடிப்பதால் குழந்தையின் வயிறு சீக்கிரம் நிறைந்து விடும். இதனால் அவர்கள் தாய்ப்பாலை சரியாக குடிக்க மாட்டார்கள். மேலும் தாய்ப்பால் மற்றும் ஃபார்முலா மில்கிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை இந்த தண்ணீர் உறிஞ்சி விடும். இதனால் குழந்தையின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சேராது.

baby drink water

மேலும் குழந்தையின் சிறுநீரகங்கள் அவ்வளவு முழுமையாய் வளர்ச்சி பெற்றிருக்காது இந்த நிலையில் தண்ணீர் அதிகம் கொடுப்பது ஆபத்தானது. இதனால் முகம் கண் போன்ற பகுதிகள் வீக்கம் ஏற்படும். அதிக தண்ணீர் குடிக்கும் குழந்தைகளுக்கு வாட்டர் இன்டாக்சிபிகேஷன் (தண்ணீர் போதை) எனும் நிலை ஏற்படும். இந்த பாதிப்புகள் குழந்தைக்கு ஏற்படாமல் இருக்க மருத்துவ வல்லுனர்களின் அறிவுரைப்படி தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் மட்டுமே குழந்தைக்கு கொடுப்பது நல்லது. தண்ணீர், தேன், சர்க்கரை தண்ணீர் போன்ற எவையும் தேவையில்லை.

குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை கொடுக்கலாமா? என்னென்ன உணவுகளை கொடுக்கலாம்?

ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு திட உணவுகளை அறிமுகம் செய்த பின் தண்ணீர் சிறிது கொடுக்க தொடங்கலாம். அப்பொழுதும் நன்கு கொதிக்க வைத்த ஆற வைத்து வடிகட்டிய தண்ணீரை மட்டுமே கொடுக்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...