வாஸ்துப்படி வீடு இல்லையா அப்படின்னா முதல்ல இதைச் செய்யுங்க …!

By Sankar Velu

Published:

ஒரு சிலர் ரொம்பவே பிளான் பண்ணி வாஸ்து படி வீடு கட்டி விடுவார்கள். கட்டி முடித்ததும் தான் தெரியும். இதை அப்படி செய்திருக்கலாமே என்று. செய்ய முடிந்தால் பணம் இருப்பவர்கள் அதை இடித்துக்கூட திரும்பவும் கட்டி விடுவார்கள்.

சிலருக்கு அப்படி கட்ட முடியாத நிலை வந்தால் என்ன செய்வது என்று கையைப் பிசைந்தபடி இருப்பார்கள். அவர்களுடைய குறையைப் போக்குவதற்காகத் தான் இந்த டிப்ஸ்கள்…

வாஸ்துவில் பரிகாரங்களுக்கு வேலை கிடையாது. வாஸ்து தவறினால் என்னென்ன செய்யலாம்…

தென்மேற்குல செப்டிக் டேங்க் இருக்கலாம். வடமேற்குல போர் இருக்கலாம். தென்கிழக்குல கிணறு இருக்கலாம். ஐ சீலிங் இருக்கலாம். மாற்றம் வரவேண்டும் எனில் இதைச் செய்யலாம்.

பட்டர் பிளை எபெக்ட் என்பது உலகின் எங்கோ ஒரு மூலையில் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப்பூச்சியின் இறக்கையின் அதிர்வுகளானது பல லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ள எங்கோ ஒரு இடத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும். இது உண்மை. இதைத்தான் உலகநாயகன் தசாவதாரம் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சொல்லியிருப்பார்.

வீட்டில் தேவையில்லாத பொருள்களை வைத்துக்கொள்ளாதீர்கள்.

அதற்காகத் தான் போகிப்பண்டிகையே வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு வீட்டை சுத்தம் செய்து வெள்ளை அடிப்பார்கள். வெள்ளை அடித்ததும் பொருள்களை அசைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பீரோவை வடக்கு பார்த்து வைக்க வேண்டும். கட்டிலை நகர்த்தி வைக்கலாம்.

birds food
birds food

பட்டுப்புடவையைக் குறைத்துக் கொள்ளுங்கள். மீதிப்புடவையை யாருக்காவது கொடுங்கள். தண்ணீர் சிக்கனத்தைக் கடைபிடியுங்கள்.
பறவைகளுக்கு உணவு கொடுங்கள். சைவ உணவு, நவதானியங்களாகக் கொடுங்கள். அணிலுக்கு, தெருநாய்களுக்கு உணவு கொடுங்கள். பிஸ்கட் வாங்கிக் கொடுக்கலாம். மிச்சமுள்ள உணவைக் கொடுக்காதீர்கள்.

பூனையை அடித்துத் துரத்தாதீர்கள். அதற்கு ஒருவேளை சாப்பாடு கொடுக்கலாம். பால் கொடுக்கலாம். மின்சாரத்தை சிக்கனப் படுத்துங்கள். எனர்ஜியை சேவ் பண்ணும்போது இது இயற்கையான ஒரு பழக்கமாக வந்துவிடும். இயற்கைக்கு நம்மை மிகவும் பிடித்து விடும்.

இயற்கையை எங்கெல்லாம் நாம் பாதுகாக்கிறோமோ அது பல மடங்கு விஷயங்களை நமக்குக் கொடுக்கும். நிறைய உதவி செய்யுங்கள். நன்றியோடு இருங்கள். ஒருநாளைக்கு 300 முதல் 500 தடவை நன்றியை உபயோகப்படுத்துங்கள். யார் மேலயாவது கோபமாக இருந்தால் மன்னித்து விடுங்கள். பௌர்ணமி அன்று கடல் பக்கம் உட்கார்ந்து சாப்பிடுங்கள்.

fish tank
fish tank

பெரிய மாற்றம் வரும். அதற்கு திருச்செந்தூர் போன்ற இடங்களை தேர்வு செய்யலாம். நீங்கள் எதிர்பார்க்கிற விஷயங்கள் நிறைவேறும். இசையை நல்ல கேளுங்கள். எப்போதுமே கேட்கிற பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். குட்டி மீன்தொட்டி பெரிய மாற்றத்தைத் தரும்.

Leave a Comment