கச்சா பாதாம் பாடலுக்கு பிறகு பிவிசிந்துவின் அடுத்த ரீல்ஸ் வீடியோ!

By Vetri P

Published:

பேட்மிட்டன் உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டு வருகிறார் இந்திய வீராங்கனை பிவி சிந்து. இவர் ஒரு முறை தங்க பதக்கத்தையும், இருமுறை வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார்.

மேலும் ஏசியன் கேம்களில் ஒரு முறை வெள்ளி பதக்கத்தினை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஒலிம்பிக்கிலும் வெள்ளி மற்றும் வெண்கல பதவிகளை வென்று இந்தியாவிற்கு பெருமையை சேர்த்த இவர் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக காணப்படுகிறார்.

அதுவும் குறிப்பாக இவர் கடந்த சில நாட்களாக சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை சந்தித்து அவர்களோடு இருக்கும் போட்டோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து கொண்டு வந்தார்.

மேலும் அவர் கச்சா பாதாம் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலானது.

தற்போது மலேசியாவில் டுவின் டவர் அருகே நின்று போட்டோ சூட் நடத்தி உள்ளார். இந்த பகுதியில் இருந்து நடனமாடிய போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து மட்டும் இல்லாமல் அதற்கான டான்ஸ் ஆடும் வீடியோவினையும் பதிவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அதில் உங்களுக்கு எது மகிழ்ச்சி தருகிறதோ, அதைச் செய்யுங்கள் எனவும் கூறியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிக் கொண்டு வருகிறது.

https://www.instagram.com/reel/Cffp5weAjEB/?utm_source=ig_web_copy_link

 

Leave a Comment