வாழ்க்கை முறை

அவர் தான் எனக்கு எல்லாமே… விஜய் தேவரகொண்டாவை பற்றி வெட்கத்துடன் பேசிய ராஷ்மிகா மந்தனா…

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா.

அதைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஹிட் திரைப்படங்களில் நடித்து நேஷனல் கிரஷ் என்ற பெயரை பெற்றார் ராஷ்மிகா மந்தனா. 2021 ஆம் ஆண்டு சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் புஷ்பா திரைப்படத்தில் நடித்து தென்னிந்தியா முழுவதும் புகழ்பெற்றார் ராஷ்மிகா மந்தனா. பின்னர் விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்தார். அடுத்து ஹிந்தி திரை உலகில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

தற்போது தனுஷுடன் இணைந்து குபேரா திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படம் வெளிவர தயாராக இருக்கிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அது உண்மைதான் என்று ராஷ்மிகாவே ஒரு நிகழ்ச்சியில் ஒப்புக் கொண்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து தற்போது குபேரா படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனாவிடம் தொகுப்பாளினி விஜய் தேவரகொண்டாவை பற்றி கேட்கும் போது மிகுந்த வெட்கத்துடன் ராஷ்மிகா மந்தனா அவர்தான் என்னுடைய எல்லாமே என்று பதில் அளித்து இருக்கிறார். இதை கேட்ட ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Avatar photo
Meena