‘எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம்…’ வேண்டும் என சிவாஜி பாடல் ஒன்று உள்ளது. அந்தப் பாடலைப் போலத் தான் நாம் சில அவஸ்தைகளில் இருந்து விடுபட நிம்மதியைத் தேடி அலைகிறோம். கோவில், பூங்கா, சுற்றுலாத்தலங்கள், பீச் என சிலர் மன அழுத்தத்தைக் குறைக்கவும் நிம்மதியைத் தேடியும் போவார்கள். ஆனால் அது அந்த சில மணித்துளிகளில் மட்டும்தான் கிடைக்கும். நிம்மதி நிரந்தரமாக வேணுமா? அப்படின்னா இதைப் படித்து ஃபாலோ பண்ணுங்க.
வாழும் நாட்களில் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தேடுங்கள். மனிதனுடைய தேவைகள் ஒரு போதும் தீர்ந்து விட போவதில்லை. உற்று கவனித்தால், யோசித்தால், ஆத்மார்த்தமாக உணர்ந்தால், நம் எல்லா கேள்விகளுக்கும் பிரபஞ்சத்திலே பதில் இருக்கிறது. தேவை விழிப்புணர்வு மட்டுமே.
நெருப்பு சுடும் என்பது அறிவாகும். அதை தொட்டு சுட்டுக் கொள்வது அனுபவம். இனி நெருப்பை தொடக்கூடாது என்று உணர்ந்து கொள்வதே ஞானம். உடலையும் உள்ளத்தையும் வருத்தாமல் பிரம்மாண்டமான எதிர்காலத்தை உங்களால் உருவாக்க முடியாது.
உள்ளுக்குள் அமைதி இல்லாதவன் வெளியில் அமைதியைத் தேடுவது வீண். மனம் சஞ்சலம் மிக்கது. சபலம் மிக்கது. சலனம் மிக்கது. குழப்பத்திற்கு காரணமே அது தான். மனம் எதற்கும் அடங்காத குரங்கு. ஆனால் இடைவிடாது பயிற்சியினாலும், வைராக்கியத்தினாலும் அதை இழுத்து நிறுத்தி விடலாம். அப்படி செய்யாதவனுக்கு வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காது.
நிம்மதி என்பது, புதையல் மாதிரி, எளிதில் கிடைக்காது, மனதை தோண்டி பார்த்தவர்களுக்கே கிடைத்திருக்கிறது, வெளியில் தேடிய யாருக்கும், கிடைத்ததே இல்லை. நிம்மதியாக வாழ வேண்டுமானால், உன் மனதின் கவலைகளை, தூண்டிவிடும் சிலரை, சந்திப்பதையும் அவர்களை பற்றி, சிந்திப்பதையும் தவிர்த்தாலே போதும்.
வாழ்க்கை, பிரச்சினைகளை மட்டுமே கொடுப்பதில்லை, அவைகளை கடந்து செல்லும் வழியையும் தான், கற்று தந்து கொண்டிருக்கிறது, கவனத்துடன் கையாள வேண்டும். எந்த கவலையும் இல்லாத வாழ்க்கை இனியொரு ஜென்மத்தில் கிடைக்க போவதில்லை. கிடைத்த வாழ்க்கையை மனசுக்கு பிடித்த மாதிரி மாற்றிக்கொண்டு வாழ வேண்டும்.
நம்மை ஆட்டிப் படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒரு போதும் நீங்குவதில்லை. மனதைக் கட்டுபடுத்தி இறைவனிடம் மனதைச் செலுத்துங்கள்.