மனம் என்பது குரங்கு. அதை எவன் ஒருவன் அடக்கி ஆளுகிறானோ அவனுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். அலைபாயும் மனதை அடக்குவது சிரமம்தான். ஆனால் அதற்கும் ஒரு பயிற்சி உள்ளது. வாங்க பார்க்கலாம்.
மனதை வளப்படுத்தவேண்டியது அவசியம். இதைக் கேட்கும்பொழுது எல்லோருக்கும் ஓர் எண்ணம் என்னவெனில், இந்த மனமானது ஓடிக்கொண்டே இருக்கிறதே இதை நிறுத்திவிட்டால் நன்றாக இருக்கும் ஆனால் அது நிற்க வேண்டுமே!. மனம் நிற்கவேண்டுமென்று எப்பொழுது நினைக்கிறார்களோ அப்பொழுதுதான் அது முன்பை விட அதிவேகமாக ஓடத்தொடங்குகிறது. அது ஏனென்றால்..
மனதை அடக்க நினைத்தால் அலையும், மனதை அறிய நினைத்தால் அடங்கும். மனதை அடக்கிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டு எங்கே அடக்குவது என்று நாம் போய்க்கொண்டே இருக்கும்போது அதுவும் ஓடிக்கொண்டேதான் இருக்கும். ஆனால் அந்த மனம் என்றால் என்ன என்று மனதையே மனதைக் கொண்டு கேட்கத் தொடங்கினால் அப்பொழுதுதான் அந்த மனதிற்கு அமைதி கிட்டும்.
இந்தக் கட்டத்திலே நாம் அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், மனத்தாலன்றி மனதை நிலைநிறுத்திவிட முடியாது என்பதே. இந்த மனதிற்கு ஒரு பயிற்சியை அளிக்க வேண்டியது அவசியம் என்பது உணரப்படுகிறது அந்த வகையில் ஒரு உன்னதமான கலை தான் குண்டலினி யோகம். இந்தப் பயிற்சியை தேர்ந்த குருமார்களிடம் முறைப்படி கற்று செயல்படுத்த வேண்டியது அவசியம்.
.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



