சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் பாடல் ஒன்று உள்ளது. அது எட்டு எட்டா மனுஷன் வாழ்வை புட்டு புட்டு வைக்கும். அது உண்மை தானே. நம் வாழ்க்கையே 8ல்தான் உள்ளது.
‘எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோ. நீ எந்த எட்டில் இப்ப இருக்கே தெரிஞ்சிக்கோ’ன்னு சொல்றமாதிரி நமது எட்டு எது? அந்த வயதில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தான் அந்தப் பாடல் உணர்த்துகிறது. அது ரஜினியின் எவர்கிரீன் மூவியான பாட்ஷா படம். ஆனால் அந்த எட்டே நமக்கும் எமனாகவும் வருகிறது.
ஆம். ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’னு சொல்வாங்க. ஆனா அந்தப் பெண்ணானவள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? அதற்குத் தான் இந்தப் பதிவு. இந்த 8 வகையான பெண்களைக் கண்டிப்பான முறையில் தவிர்ப்பதே நல்லது. யார் அவர்கள்? வாங்க பார்க்கலாம்.
ஒரு பெண் தன்னையன்றி இன்னொரு ஆணை விரும்புவதாக இருந்தால் அவளை கைவிடுங்கள். ஊதாரித்தனமான பெண்கள், பார்ட்டி கேர்ள்ஸ், பொருள் சார்ந்த பெண்கள், கீழ்படியாத மற்றும் பழிவாங்கும் பெண்கள், ஒற்றைத் தாய்மார்கள், வன்முறை மற்றும் கோபம் கொண்ட பெண்கள், சமூக ஊடகங்கள், ஆண்களின் கவனம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள பெண்கள், பிரபலங்களால் அதீதமாக ஈர்க்கப்படும் பெண்கள் என 8 வகைகளில் உள்ளனர்.
இவர்களில் யாரை நீங்கள் மனைவியாக்கினாலும் அது உங்கள் வாழ்க்கையின் நிம்மதியை சீர்குலைத்து விடும். அதனால் திருமணம் என்று வந்து விட்டால் இதுபோன்ற பெண்களைத் தவிருங்கள். புத்திசாலித்தனமான பெண்களையும், மரியாதைக்குரியவர்களையும் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுங்கள்.