அலைபாயும் மனதை செம்மைப்படுத்தறதுக்கு சரியான நேரம் இதுதான்….! சத்குரு சொல்லும் எளிய வழிகள்

Published:

நாம ஒண்ணும் நெனைப்போம். ஆனா அது வேற மாதிரி போயி முடியும். என்ன காரணம்னா அது மனசு தான். அதுக்கு எது ஈசியா படுதோ அதைத்தான் உடனே செய்யும். கெட்டதுன்னா அது உடனே செய்ய ஆசைப்படும். அதுல இருந்து நாம தப்பிக்கவே முடியாதான்னா ரொம்ப சிம்பிள். அது எப்படிங்கறதை சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்றாரு. என்னன்னு பார்க்கலாம்.

சிந்தனையின் போக்கு தான் உடலுக்கு நோயையும் சேதத்தையும் உருவாக்குகிறது. மனதில் என்ன நடக்கிறதோ அது அப்படியே உடம்பிலும் நடக்கிறது.

எப்போ அது உடலில் சேதமாக முடிகிறதோ அப்போது தான் நாம் யோசிக்க ஆரம்பிக்கிறோம். அப்படி செய்வதால் ஒன்றும் நடக்காது. உயிரை சித்ரவதை செய்ய உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

நோய் வருவதும் வராததும் இரண்டாவது பட்சம். நீங்கள் உடலுக்கு எந்த அபத்தத்தை செய்தாலும் அதை அனுபவித்தே ஆக வேண்டும். இது முற்றிலும் நாதியற்ற உயிர். ஏற்கனவே நோய் இருந்தால் அதற்கு நீங்கள் தான் காரணம்.

sadguru3 1
sadguru

நீங்க தான் அந்த அளவுக்குக் கொண்டு போயிருக்கீங்க. அது உங்கள் உடல் இயக்கத்தையே சேதப்படுத்திருக்கு. அதனால அதுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்யறது சிறந்தது. நீங்க உங்க உடலுக்கு செய்ற அபத்தத்தைக் கண்டிப்பா நிறுத்தணும்.

உங்க உடலுக்கு அறுவை சிகிச்சை, மருந்துன்னு என்ன தேவைப்படுதோ அதை செய்யணும். இதை மனசு வழியா வெளியேற்ற முடியாது. அது ரொம்ப ரிஸ்க். ஒரு கட்டத்தைத் தாண்டி போகும்போது உங்களாலேயே உங்க உயிரைக் காப்பாத்த முடியாது. அதனால உங்க மனசை உயிருக்கு உறுதுணையா ஆக்கறது உங்க வேலை தான்.

உங்க மனசு இந்த உயிருக்காக வேலை செய்யணும். அது நன்மை செய்யறதா இருக்கணும். மனசு உங்களுக்கு வேலைக்காரர். அவங்கள உங்க எதிரியா ஆக்கிடாதீங்க. நீங்க உங்க குழந்தைகளை சரியாகக் கையாள வில்லை என்றால் அவர்கள் எதிரிகளாக மாறிடுவாங்க. வாழ்க்கையும் அப்படித்தான்.

sadguru2 1
sadguru2

ரொம்பவும் சக்திவாய்ந்த அழகான மனம் ஏன் எதிரியானது? நேரத்தைத் துளி கூட வீணாக்கக்கூடாது. யோசிச்சி யோசிச்சி நோயை வர வைக்கிறதும், நோயை வெளியேற்றுவதும் வேடிக்கையான விஷயமல்ல. அதுக்கு உயிரையே விலையா கொடுக்கணும்.

உங்களுக்கு ஒரு நோய் வந்துடுச்சுன்னா அதுவே உங்களுக்கு முழுகவனத்தையும் எடுத்துக் கொள்ளும். இது வேடிக்கையான விஷயமல்ல. நீங்க அந்த நிலைக்கு போற வரை அது எவ்வளவு மோசமானதுன்னு உங்களுக்குத் தெரியாது.

உங்க மனசை சரியான இடத்துல வைங்க. அது உங்களுக்காக அழகான விஷயங்களைச் செய்யணும். ஆனா அசிங்கமான விஷயங்களைத் தான் மனம் செய்கிறது. என்னால அவ்வளவு பொறுத்துக்க முடியல. அவ்வளவு தாங்கிக்க முடியல. இப்படி வருத்தம், கோபம், வெறுப்பு என நீங்களே உருவாக்கிக் கொள்ளுறீங்க.

இது நீங்கக் குடிக்கிற விஷங்கள். இது உங்களோட உயிருக்குத் தான் ஆபத்து. இன்னோருத்தருக்கு அல்ல. உங்க மனசு உங்களுக்கு எதிரா வேலை செஞ்சா அதுல இருந்து தப்பிக்குறதுக்கு முதன்மையான விஷயம் என்னன்னா நீங்க என்னெல்லாம் வேலை செஞ்சிக்கிட்டு இருக்குறீங்களோ அதுல இருந்து கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கணும்.

ஒரு இடத்துல ஆற அமர உட்கார்ந்து உங்க மனசுக்கு என்னவெல்லாம் செய்ய முடியும்னு யோசிங்க. ஒண்ணு உங்களுக்கு நீங்க நல்லது செய்யணும். இல்லன்னா உங்களைச் சுற்றி இருக்குற பத்து பேருக்காவது நல்லது செய்யணும். ஒண்ணு நீங்களாவது சந்தோஷமா இருந்தா நீங்க நலமா இருப்பீங்க.

இல்ல உங்களுக்கு சுற்றி இருக்குறவங்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சாலும் நீங்க நலமா இருப்பீங்க. யாரு ஒருவர் தனக்கும் நல்லது செய்யாம சுற்றி இருக்குறவங்களுக்கும் நல்லது செய்யாம இருக்காங்களோ அவங்க தன்னை மனிதன்னு சொல்லிக்கிறதுக்கே உரிமையில்ல.

அந்த அளவுக்கு புத்திசாலித்தனத்தையும், விழிப்புணர்வையும் இயற்கை உங்களுக்கு வழங்கியிருக்கு. நீங்க பெரிய விஷயம் எதுவும் இந்த உலகத்துக்கு செய்ய வேண்டாம்.

குறைஞ்சது இந்த பூமி மேல சந்தோஷமாவது நடங்க. அப்படி நடந்தா திடீர்னு இந்த உலகம் முழுவதும் உங்களுக்கு அழகா தெரியும். அப்படி தெரியும்போது இயற்கையாகவே எல்லாவற்றின் மேலும் நீங்க அன்பாகத் தான் பார்ப்பீங்க.

இது ஒரு இயற்கையான செயல்முறை. அப்படி உங்களால இருக்க முடியலன்னா உங்களைக் கவனிக்க வேண்டிய நேரம் இதுதான். நான் ரொம்ப முக்கியமான வேலை செய்றேன். எனக்கு நேரமில்லன்னு சொல்லாதீங்க. நீங்க இதை விட முக்கியமான வேலை எதுவும் செய்யல. ஏன்னா நீங்க செய்யற எல்லாத்துலயும் நீங்க யாருங்கறது வெளிப்படும்.

Hitler
Hitler

1934ல் ஹிட்லர் எனது மூதாதையரோட கடமையைத் தான் நான் செய்றேன்னாரு. எதுக்காக மக்களை மொத்தமா வளைச்சிக் கொல்றதுக்காக கேஸ் சேம்பருக்கு அனுப்புறாருன்னு கேட்டா இப்படி சொல்றாரு. அவர் செய்றதை அவரு நம்புனாரு. உலகத்துக்கு செய்ற சிறந்த செயல் இதுதான்னு நம்புனாரு. அவர் முழுமையா தன்னை நம்பினாரு.

குறுகிய காலத்துக்குள்ள அந்த நாடு முழுவதையும் அவர் ஒருங்கிணைச்சாரு. நீங்க இருக்குற இடம் எப்போ மாறும்னா நீங்க சந்தோஷமா சுவாசிச்சி இருந்து படுத்து உட்கார்ந்தா மட்டும் தான்.

உங்களால இந்த ஒரு விஷயத்தை செய்ய முடியலன்னா மத்த எல்லாமே விஷமாத்தான் இருக்கும். நீங்க என்ன செஞ்சாலும் சரி…உங்களுக்குள்ளே நீங்க இனிமையை இருந்தால் தான் உங்களை சுற்றி இனிமையா உணர்வீங்க.

 

 

மேலும் உங்களுக்காக...

Leave a Comment