பாலூட்டும் தாய்மார்களா நீங்கள்?? அப்போ உங்க உணவுல இதையெல்லாம் சேர்த்துக்க மறந்துடாதீங்க…! பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவுகள்…

Published:

ஒரு குழந்தை பிறந்த நாள் முதல் ஆறு மாதம் வரை கட்டாயமாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. தாய்ப்பாலை தவிர தண்ணீர், தேன், பசும்பால் போன்ற எதையும் குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திற்கு கொடுக்கக் கூடாது.

ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுக்க ஆரம்பித்தாலும் அவர்களுக்கு முடிந்தவரை இரண்டு வயது வரையாவது தாய்ப்பால் கொடுப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஃபார்முலா மில்க் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்றாலும் அதில் குழந்தைக்கு தேவையான முழு ஊட்டச்சத்தும் எதிர்ப்புசக்தியும் இருக்காது.

mother

எனவே பால் சுரப்பு போதவில்லை என்றால் தாய்மார்கள் ஃபார்முலா மில்க் பக்கம் போகாமல் பால் சுரப்பதற்காக உணவு முறைகளை மாற்றிக் கொண்டால் போதும். தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவினை உட்கொள்ளும் பொழுது அந்த குழந்தையும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த குழந்தையாக வளர்கிறது.

தாய்ப்பால் கொடுத்தால் அழகு போய்விடும் என்பது மிகப்பெரிய கட்டுக்கதை. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது என்று மருத்துவத்துறையினரால் கூறப்பட்டு வருகிறது.

நீர்ச்சத்து நிறைந்த உணவுகள்:

hydration

பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் வரை தண்ணீர் பருக வேண்டும். குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டி இருப்பதால் தாயின் உடலில் அதிக அளவு நீர் இழப்பு ஏற்படும்.‌ பால் கொடுப்பவர்களுக்கு அதிகம் தாகம் எடுப்பதை உணர்ந்திருக்கலாம் அதற்கு காரணம் உங்கள் உடலில் நீர் குறைவு ஏற்படுவது தான். அதை சரி செய்ய நீர் நிறைந்த உணவுகளான பால், பழங்கள், பழச்சாறு மற்றும் சூப் வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

DHA ( Docasa Hexanenoic Acid):

DHA

ஒரு குழந்தையின் ஆரோக்கியமான பார்வை வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் டி‌ ஹெச் ஏ உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சைக்கோ மோட்டார் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. வாரத்திற்கு இரு முறை கொழுப்பு மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த டிஹெச்ஏ வை பாலூட்டும் தாய்மார்கள் பெறலாம். சால்மன் , நீலமீன், டுனா, ட்ரவுட், பாஸ், ஃப்ளவுஸ்டர் போன்ற மீன்களில் டி ஹெச் ஏ அதிகம் உள்ளது.

இரும்புச்சத்து உணவுகள்:

iron 1

பாலூட்டும் தாய்மார்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். இது பேரிச்சம் பழம், கீரை, பருப்பு வகைகள் இவற்றில் அதிகம் உள்ளது. எனவே இரும்புச்சத்து அதிகம் உள்ள தவிர்க்காமல் சேர்த்துக் கொள்ளவும்.

கால்சியம்:

calcium

கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கும் எலும்புகள் உறுதியாய் இருப்பதற்கும் குழந்தைக்கு மிகவும் அவசியம் இந்த கால்சியம் தாய்ப்பாலில் வழியாக குழந்தைக்கு சென்று சேர்க்க பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர், பாலாடை கட்டி, பன்னீர், கேழ்வரகு போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

விட்டமின் டி:

vitamin D

விட்டமின் டி ஆனது குழந்தைகளுக்கு பிறந்த பொழுது உண்டாகும் மஞ்சள் காமாலை நோயிலிருந்து அவர்களை காத்திட மிகவும் அவசியம். இந்த விட்டமின் டி கொழுப்பு மீன்களிலும் காலை நேர சூரிய ஒளியிலும் அதிகம் கிடைக்கிறது.

புரதம்:

பால், முட்டை, இறைச்சி, நட்ஸ்கள் போன்ற புரதம் நிறைந்த பொருட்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தாய் சேய் இருவருக்கும் தேவையான புரத சத்தை வழங்குகிறது.

protein

இது தவிர வெந்தயம், பூண்டு ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளவும். இவையும் பால் சுரப்பதற்கு உதவி புரியும்.

மேற்கண்ட அனைத்து சத்துக்களும் சமமாய் கலந்தபடி சரிவிகித உணவாய் தினமும் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். மூன்று வேளையும் ஆரோக்கியமான உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக காலை நேர உணவை தவிர்க்கவே கூடாது. மூன்று நேர ஆரோக்கியமான உணவும் இரண்டு வேளை பயிர் வகைகள் போன்ற சிற்றுண்டியும் உங்களது உணவு பட்டியலில் இடம் பிடித்தால் உங்கள் குழந்தையை ஆரோக்கியமான ஒரு குழந்தையாக வளர்க்க முடியும்.

மேலும் உங்களுக்காக...